விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் எந்த கட்சிக்கு போகும்?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வின் பெண்கள் ஓட்டுகள் யாருக்கு விழும் என்று அரசியல் விமர்சகர்கள் புதிய தகவல் தெரிவித்துள்ளனர்.;
விக்கிரவாண்டி கிடைத்த தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில் அந்த கட்சியின் வாக்குகள் யாருக்குப் போகும் என்பது தொடர்பாக அரசியல் விமர்சகர்களின் கருத்துக்கள் என்னவென்று பார்க்கலாம்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில் :-
பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுக-வினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது, மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.
"அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்". திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கூறி உள்ளது அதிமுக.
இந்த நிலையில் அதிமுவிற்கு உள்ள வன்னியர் வாக்குகளை குறி வைக்க பாமக களமிறங்கி உள்ளது. இங்கே அன்புமணி அதிமுகவினர் ஆதரவை கேட்டுள்ளார். எம்ஜிஆர்,ஜெயலலிதா போட்டோவை வைத்து அன்புமணி பிரசாரம் செய்கிறார். அதிமுக வாக்குகள் அப்படியே தங்களுக்கு வரும் என்று அன்புமணி நினைக்கிறார். அதிமுகவின் 30+ வாக்குகளை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதில் அன்புமணி தீவிரமாக களப்பணிகளை செய்து வருகிறார். அதிமுகவின் வன்னியர் வாக்குகள்தான் அன்புமணியின் குறி என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் முக்கியமான வாக்கு வங்கியில் கைவைக்க திமுக காய் நகர்த்தி வருகிறதாம். இதற்கான முயற்சிகளை திமுக முன்னெடுத்து வருகிறதாம். அதன்படி திமுக அதிமுகவின் தலித் வாக்கு வங்கி, பெண்கள் வாக்கு வங்கியை குறி வைக்க உள்ளதாம். விக்கிரவாண்டியில். அதிமுகவின் தலித் வாக்குகள் பாமக காரணமாக திமுகவிற்கு வரும் என்று திமுக நம்புகிறதாம். அதோடு கூடுதலாக மகளிர் உரிமை தொகை காரணமாக பெண்கள் வாக்குகள் கணிசமாக வரும் என்றும் திமுக நினைக்கிறதாம்.
ஜெயலலிதா இருந்த போது பெண்கள் வாக்குகள் அதிகமாக அதிமுகவிற்குச் சென்றது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த வாக்குகள் எல்லாம் திமுக பக்கம் செல்லத் தொடங்கி உள்ளது. இவ்வாறு கூறியுள்ளனர்.