மோடியின் 3.0 அரசுடன் இணைகிறாரா உத்தவ்தாக்கரே?

ஜேடியுவும், தெலுங்குதேசம் கட்சியும் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றால் மோடி 3.0 வீழ்ந்து விடுமா?;

Update: 2024-06-11 05:27 GMT
உத்தவ் தாக்கரே(கோப்பு படம்)

பிரதமர் மோடி இந்த தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெரும்பான்மை பெற்றார். ஆனால் ஜேடியு, தெலுங்குதேசம் கட்சியினர் இணைந்த என்.டி.ஏ., கூட்டணி 292 இடங்களை பெற்றது.

ஜூன் நான்காம் தேதி 292 ஆக இருந்த என்டிஏ அணியின் பலம் ஜூன் 6ஆம் தேதி 303 ஆக மாறியது. மேலும் சில இணைக்கப்படாத கட்சிகள் என்டிஏவுடன் இணைந்தன. இதனால் மோடியின் அணிக்கு பலம் அதிகரித்தது.

இந்த நிலையில் ஜேடியு 12 இடங்களையும், தெலுங்குதேசம் கட்சி 16 இடங்களையும் பெற்றுள்ளது. அவர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேவையான அறுதிப்பெரும்பான்மையினை விட கூடுதலாகவே 3 இடம் கிடைக்கும். அதாவது 275 இடங்கள் கிடைக்கும். இதனால் மோடிக்கும், அவரது அரசுக்கும் எந்த பிரச்னையும் ஏற்படாது.

இந்த இரண்டு கட்சிகளும் தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கைக்காகவோ அல்லது மதச்சார்பற்ற பிரச்சினைகளுக்காகவோ ஆதரவை வாபஸ் பெறலாம். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் பட்ஜெட் அதிகரிக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்திருக்கலாம். அவர்களின் பேராசை செயல்பட்டால் அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறலாம். இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. அப்படி நடந்தாலும், அதனை எதிர்கொண்டு அரசாங்கத்தை நடத்த தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டனர்.

இந்த இரண்டு தலைவர்களும் நன்கு அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் இந்த கட்சிகளின் தலைவர்களுக்கு கூட்டணி அரசின் முக்கியத்துவம் தெரியும். எனவே இவர்கள் எந்த சூழலிலும் வாபஸ் பெற வாய்ப்பே இல்லை என அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்தி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே இப்போதே அதிருப்திகள் தொடங்கி விட்டன. அவர்கள் அதிகாரத்திற்காக கூட்டு சேர்ந்தால், அந்த பிரச்னையே அவர்களுக்கு பெரும் சிக்கலையும் ஏற்படுத்தும். எனவே இவர்கள் அடுத்த தேர்தலில் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது கடினம். இந்த சூழலில் நிதிஷ்குமாரும், சந்திரபாபுநாயுடுவும் மற்ற மீடியாக்களில் வெளிவரும் செய்திகளை போன்றே, இவர்கள் எந்த நிலையிலும் விலகவே வாய்ப்பில்லை.

இந்த நிலையில் பா.ஜ.க.,வுக்கு புதிய வரவாக உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவும் நடந்தால் இந்தி கூட்டணி மிகவும் பலகீனமாகி விடும். பா.ஜ.க., அசுர பலம் பெற்று, தாங்கள் நினைத்ததை செய்து முடிக்கும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News