திடீரென இரவோடு இரவாக அமித்ஷாவை போய் பார்த்த தமிழிசை

தமிழ்நாடு பாஜகவில் நிர்வாகிகள் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அமித் ஷாவை சென்று சந்தித்துள்ளார்

Update: 2024-06-29 05:01 GMT

தமிழிசை, அண்ணாமலை, அமித் ஷா 

தமிழ்நாட்டில் அண்ணாமலை - தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

அதில், நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன்.

நான் இங்கே தான் இருப்பேன். ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?.

இன்னொன்று நாங்கள் எல்லாம் 2 இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால் தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்து விட்டோம்.

அதிமுக - பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம். சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. அண்ணாமலையிடம் அதை நீங்கள் கேட்கலாம். எனக்கு கருத்து இருந்தால் நான் சொல்வேன், என்றெல்லாம் தமிழிசை விமர்சனம் செய்து வருகிறார்.

இன்னொரு பக்கம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவின் போது தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது.

தமிழிசையை அழைத்து கண்டிப்பது போல கையால் சைகையை காட்டுகிறார். இதற்கு தமிழிசை பதில் அளிக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாமல் தமிழிசையை கண்டிக்கும் விதமாக அமித் ஷா மறுத்து பேசுகிறார். இந்த வீடியோ டிரெண்டானது.

இன்னொரு பக்கம் அண்ணாமலை, பாஜகவில் இனி பேட்டிகளை ஒழுங்கு செய்ய போகிறோம். இனி பேட்டிகளை பாஜக அலுவலகத்தில் மட்டுமே கொடுப்போம். பாஜக அலுவலகத்தில் மட்டுமே பேசுவோம். ஏர்போர்ட்டில் எல்லாம் பேச மாட்டேன் என்று கூறினார். தனக்கு மட்டுமின்றி பாஜகவில் எல்லா பேட்டியையும் ஸ்ட்ரீம் லைன் செய்ய போவதாக கூறினார்

இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலை - தமிழிசை அதன்பின் நேரில் சந்தித்து சமரசம் ஆனார்கள். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அண்ணாமலை அப்படியே அமைதியாகி விட்டார்.

இப்படிப்பட்ட மோதல்களுக்கு இடையில் தான் தமிழ்நாடு பாஜகவில் நிர்வாகிகள் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக தேசிய மூத்த தலைவர், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சென்று சந்தித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவில் நடக்கும் சில மோதல்கள், உட்கட்சி விவகாரங்கள், கட்சியில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி அமித் ஷா கேட்ட விளக்கத்தின் அடிப்படையில் தமிழிசை அவசரமாக சென்று இந்த விளக்கத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News