முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அதிமுக விஐபி: ஏன் தெரியுமா?

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மகனான, ரவீந்திரநாத் எம்.பி. சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Update: 2022-05-18 10:30 GMT

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் தேனி எம்பி ரவீந்திரநாத்.


திமுக - அதிமுக ஆகிய கட்சிகளின் கொள்கையில் பெரிய அளவில் வேறுபாடு இல்லாதபோதும், அரசியல் களத்தில் நீயா - நானா என்று மல்லுக்கட்டுவதுண்டு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை, அதிமுகவினர், தப்பித்தவறி கூட திமுகவினர் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை. அவரது மறைவுக்கு பின்னர், இரு கட்சிகளிடம் இத்தகைய மனப்போக்கு மறைந்து, பொது இடங்களில் பார்த்தால், கை குலுக்கி, வணக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.

இந்த சூழலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத் எம்.பி. முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, பாரதியார் கவிதைகள் நூலை முதல்வருக்கு பரிசாக வழங்கிய ரவிந்திரநாத் எம்.பி., பின்னர் தனது தொகுதியான தேனி சார்ந்த சில கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வழங்கினார்.

முன்னதாக, நிருபர்களை சந்தித்த ரவீந்திரநாத் எம்.பி, ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது. பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய அரசு அதிமுக அரசுதான் என்றார். முதலமைச்சரை அதிமுக எம்.பி. ஒருவர் சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News