'நவீன இந்தியாவின் சிற்பி' நேருவின் வரலாறு அறிவோம் வாருங்கள்..!
Nehru Mama Speech in Tamil-நேரு, இங்கிலாந்தில் இயற்கை அறிவியல் பயின்றதுடன் தந்தையின் விருப்பத்திற்காக சட்டம் பயின்றார்.;
Nehru Mama Speech in Tamil
இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கி அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளை நடுநிலை வகிக்கச் செய்தவர். சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி, தொழில் போன்ற துறைகளை முன்னேற்றம் காணச் செய்தவர். அதற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் ஜவகர்லால் நேரு. 'நவீன இந்தியாவின் சிற்பி' என்று போற்றப்படுகிறார். நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நாட்டுக்கு ஆற்றிய பணிகள் குறித்து அறிந்துகொள்வோம்.
பிறப்பு
ஜவகர்லால் நேரு, உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பெரிய செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும், ஸ்வரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். நேருவுக்கு, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள் இருந்தனர்.
Nehru Mama Speech in Tamil
ஜவகர்லால் நேரு, இந்தியாவின் முதல் பிரதமர், குழந்தைகளை நேசித்தவர், சிறந்த கல்விக்கு வித்திட்டதுடன் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர். அவர் குழந்தைகளுடன் மிகவும் அன்பாக பழகக்கூடியவர். குழந்தைகளால் நேரு மாமா என்று அன்போடு அழைக்கப்பட்டவர். தனது சட்டையில் எப்போதும் ஒரு ரோஜா மலரை சூடியிருப்பார்.
குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் அறிவைத் தூண்டும் வகையில் பல நல்ல கருத்துக்கள் அடங்கிய நூல்களை எழுதியுள்ளார். அவ்வாறு அவர் எழுதிய நூலில் எழுதியுள்ள பொன்மொழியில், "இன்றைய குழந்தைகள்தான் நாளைய தலைவர்கள்" என்று ஜவஹர்லால் நேரு கூறியது. அவர் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு மாணவர்கள் கல்வி அறிவு பெறும் வகையில் பல கல்லூரிகளையும், பல உயர்கல்வி நிறுவனங்களையும் உருவாக்கினார்.
Nehru Mama Speech in Tamil
இளைய தலைமுறையே ஒரு நாட்டின் எதிர்காலம் என்பதை வலிமையாக நம்பியவர் நேரு. ஆகவே எதிர்கால இந்தியர் சிறந்ததாக உருவாக்கவேண்டுமானால் மாணவர்களின் கல்வி சிறப்பானதாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆகவே வலிமையான இந்தியாவை உருவாக்கவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பல நல்ல நன்மைகள் உருவாக்கும் திட்டங்களை கொண்டுவந்தார். அவர் குழந்தைகள் மீது கொண்ட அன்பினாலதான் அதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஜவகர்லால் நேரு பிறந்த தினம் அதாவது நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
Nehru Mama Speech in Tamil
கல்விக் கொள்கை
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால் நாட்டின் கல்வி முக்கியமானது என்பதை நேரு சரியாக கணக்கிட்டு அதற்கேற்ப திட்டங்கள் வகுத்தார். மாணவர்களின் கல்வி வளரும் விதமான கல்வியை, கற்றலுக்கு ஏதுவாக கல்வித் துறையை சீர்படுத்தினார். நேருவின் கல்விக் கொள்கையானது காரல் மார்க்ஸ் மற்றும் மகாத்மா காந்தியின் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தது.
ஐந்து ஆண்டு திட்டம்
ஐந்தாண்டு திட்டங்களின் மூலமாக எல்லாத் துறைகளிலும் ஒரு குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயித்து அந்த இலக்குகளை அடைய திட்டங்களை வகுத்தார். அதனால், திட்டங்கள் வெகு விரைவாக மக்களை சென்று சேர்ந்தது. இதனால் இந்திய அரசின் ஐந்து ஆண்டு திட்டங்களின் மூலமாக இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி இலவசம் என்றதுடன் கல்வி கட்டாயமானது என்பதை உறுதிப்படுத்தினார்.
Nehru Mama Speech in Tamil
உயர் கல்வி நிறுவனங்கள்
நாட்டின் இளைஞர்களுக்கு நேருவின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் தான் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான (ஐஐடி), இந்திய மேலாண்மை நிறுவனங்கள், அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் போன்ற முக்கிய உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலமாகவே இளைஞர்கள் உயர்கல்வி நிலையை அடைய முடிந்தது.
இந்தியாவில் 1950ம் ஆண்டு மே மாதம், மேற்கு வங்காள மாநிலத்தின் காரக்பூரில் முதல் ஐஐடி ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர் போன்றவைகள் ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளின் உதவியுடன் தொடங்கப்பட்டன. இதன்மூலம் உலகளாவிய கல்வியை இந்திய மாணவர்களும் கற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
கலை, கலாச்சாரம்
மேலும் நேரு வெறும் ஏட்டுக்கல்வியோடு இளைஞர்கள் வளர்ச்சி நின்றுவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார். இந்திய கலை கலாசாரம், பண்பாட்டு விழுமியங்கள் மாறாது போற்றப்படவேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தார். அதற்காக லலித் காலா அகாடமி மற்றும் சாகித்திய அகாடமி போன்ற பண்பாட்டு அமைப்புகளை நிறுவ உதவினார். அவரைப் பொறுத்தவரை, கல்வி என்பது கல்வியாளர்களை அல்லது அறிவை வளப்பதற்கு மட்டுமானதாக இருக்கக்கூடாது என்பதில் உறுதிபூண்டிருந்தார். கல்வி என்பது கலை, கலாச்சாரம் மற்றும் நமது பண்பாடுகளைத் தாங்கியது என்று நம்பினார்.
Nehru Mama Speech in Tamil
அவ்வாறான உயர் சிந்தனை பெற்றவர் என்பதாலேயே ஜவகர்லால் நேரு,'சுதந்திர இந்தியாவின் நவீன கல்வி முறையின் சிற்பி' என்று கருதப்பட்டார்.
குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகளை காப்பதற்கு நேரு முன்னுரிமைக்கொடுத்தார். குழந்தைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கான அரசியல் சட்டங்களை கொண்டுவருவதிலும் முனைப்புக்காட்டினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, குழந்தைகளின் உரிமைகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன.
கல்வி உரிமை
6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமை.
குழந்தை தொழிலாளர் தடுப்பு
எந்தவொரு அபாயகரமான வேலையிலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.
வளர்ப்பு முறை
குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான உரிமை.
குற்றச் செயல்களில் இருந்த பாதுகாத்தல்
துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.
பொருளாதார பாதுகாப்பு
அவர்களின் வயது அல்லது உடல் வலிமைக்கு பொருந்தாத தொழில்களை அணுகுவதற்கான பொருளாதாரத் தேவையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.
ஆரோக்கியம் பேணுதல்
ஆரோக்கியமான வளர்ச்சிக்கான சம வாய்ப்புகள் மற்றும் வசதிகளுக்கான உரிமை.
பாதுகாப்பு
சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான உரிமை மற்றும் சுரண்டலுக்கு எதிராக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
Nehru Mama Speech in Tamil
உலக குழந்தைகள் நாள் – International Children's Day
நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 1ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டாலும், உலகளாவிய குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 20ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2