தமிழகத்தில் மோடி அலை : பா.ஜ.க.,வினர் உறுதி..!
தமிழகத்தில் மோடி அலை. .அண்ணாமலை அலை... உருவாகி உள்ளது என பா.ஜ.க.,வினர் தெரிவித்தனர்.;
பா.ஜ.க.,வின் வர்த்தக பிரிவு தேனி மாவட்ட தலைவர் கே.கே.ஜெயராம் நாடார் கூறியதாவது:
இந்தியாவில் 2014ம் ஆண்டு மோடி அலை உருவானது. 2019ம் ஆண்டு அந்த அலை உருவாகி மீண்டும் அது வலுப்பெற்றது. இப்போது உச்சத்தை எட்டி உள்ளது. இந்த முறை வட இந்தியா மட்டுமின்றி தமிழ்நாடு, தெலுங்கானா உட்பட தென் மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மோடி அலை உருவாகி உள்ளது.
தமிழகத்தில் பெரிய பிளஸ் பாயிண்ட் மோடி அலையுடன்... அண்ணாமலை அலையும்... உருவாகி உள்ளது. அதேபோல் மாநிலம் முழுவதும் கடுமையாக தி.மு.க., எதிர்ப்பு அலை இருந்து வருகிறது. மக்கள் தி.மு.க., ஆட்சியின் மீது கடுமையான வெறுப்பில் உள்ளனர். இந்த அதிருப்தி தேர்தல் நாளன்று வெளிப்படும். இதனால் இந்த முறை தமிழகத்தில் பா.ஜ.க., மிகப்பெரிய வெற்றியை பெறும்.
இரண்டு இலக்கத்தில் எம்.பி., பதவிகளை கைப்பற்றும். அண்ணாமலை, முருகன், தமிழிசை சவுந்திரராஜன், நயினார் நாகேந்திரன், பொன்னார், ராதிகா சரத்குமார், சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட பலர் வெற்றிக் கோட்டை எட்டி விட்டனர். அதேபோல் ராமனாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ்., வெற்றி பெறுவார். தேனி தொகுதியில் டி.டி.வி., தினகரனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. டி.டி.வி., தினகரன் அபரிமிதமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை தக்க வைப்பார். பா.ம.க.,வும் இதுவரை இல்லாத அளவு எம்.பி.,க்களை அள்ளும்.
தமிழக மக்கள் பிரதமர் மோடியை புரிந்து கொண்டனர். தேசத்தின் பாதுகாப்பினை பலப்படுத்தி இந்தியாவை வல்லரசாக உருவாக்கி உள்ளார். கொரோனா பேரிடரில் 140 கோடி மக்களையும் பாதுகாத்து, 65க்கும் மேற்பட்ட உலக நாட்டு மக்களையும் பாதுகாத்தார். இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது எல்லோருக்கும் தெரியும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.
நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைகிறது. ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். தேச விரோதிகள் வேட்டையாடப்படுகின்றனர். உலகின் எந்த நாடும் இந்தியாவிற்கு இப்போது கட்டளையிட முடியாது. இந்தியா தான் உலக நாடுகளுக்கு கட்டளையிடுகிறது.
மோடி தலைமையிலான புதிய இந்தியா சீனாவை மூன்று ஆண்டுகளாக எல்லையில் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்தியாவை சீண்டினால் அடித்து நொறுக்கி விடுவோம் என்றும் நிரூபித்தும் உள்ளது. இதனை உணர்ந்து கொண்ட சீனா பின்வாங்கினால் அசிங்கம் எனக்கருதி தவித்து வருகிறது. சீனா எல்லையில் சீண்டினால் இந்தியாவிடம் இந்த முறை மரணஅடி வாங்கும் என்பது உலக நாடுகளுக்கும் தெரியும்.
இந்தியாவில் உள்ள அத்தனை பேருக்கும் தெரியும். இந்தியாவை எதிர்த்து வந்த பாக்கிஸ்தான் பொருளாதாரம் எந்த அளவு சீரழிந்து, அந்த நாட்டு மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியா இரக்கம் காட்டுவதால் தான் இலங்கை இன்று வரை உயிர்ப்புடன் உள்ளது. இல்லாவிட்டால் இலங்கை அழிந்திருக்கும்.
இந்தியாவை சீண்டிய மாலத்தீவின் பொருளாதாரம் அடியோடு நாசமாகி உள்ளது. அதேபோல் இந்தியா தன் நட்பு நாடுகளுக்கு கை கொடுத்து துாக்கி விடவும் தவறுவதில்லை. தன்னை எதிர்ப்பவர்களை அழித்தொழிக்கவும் தயக்கம் காட்டுவதில்லை. வெளியுறவு கொள்கையில் இந்தியா மிகப்பெரிய சுயசார்பினை கடைபிடிக்கிறது. இன்று பல அரேபிய நாடுகள் கூட தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு இந்தியாவை எதிர்பார்த்துள்ளன.
ஊழல் இல்லாத ஆட்சி, வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதாரம், தேசத்தின் பாதுகாப்பு, உள்கட்டமைப்புகளில் ஏற்படும் பொருளாதாரம் என மோடி புதிய இந்தியாவை கட்டமைத்து வருகிறார். இதற்கு இன்னும் சில ஆண்டுகள் மோடிக்கு தேவைப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவே மோடியை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்.
இதனை நாங்கள் வெறும் வாய்ச்சொல்லாக சொல்லவில்லை. மக்களுடன் மக்களாக கலந்து, அவர்களின் எண்ண ஓட்டங்களை முழுமையாக அறிந்த பின்பே இந்த அளவு உறுதியாக கூறுகிறோம். எனவே தமிழகத்தில் பா.ஜ.க.,வின் வெற்றியை இந்த முறை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு கூறினார்.