பொருளாதார மேம்பாட்டில் இந்தியாவை சிறப்பாக வழி நடத்தும் ஸ்ரீரங்கத்து தேவதை
பொருளாதார மேம்பாட்டில் இந்தியாவை சிறப்பாக வழி நடத்தும் ஸ்ரீரங்கத்து தேவதையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளார்.;
கிறிஸ்தவ பெண்கள், இஸ்லாமிய பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகில் ஒரே ஒரு இந்துபெண்ணாக அவர் தனித்து ஆதிக்கம் செலுத்துகின்றார். அவர் திருச்சி ஸ்ரீரங்கத்து தமிழச்சி. பின் வெளிநாட்டில் படித்து கணவருடன் பெங்களூரிலும் ஐதராபாத்திலுமாக வசித்து பள்ளி நடத்திய பொழுது சுஷ்மாவின் பார்வையில் பட்டு தேசிய பணிக்கு வருகின்றார். சுஷ்மாவின் அனுபவம் அவர் தனக்கு மிக சரியான வாரிசாக இருப்பார் என்பதை சொல்லிற்று.
காலம் அதை உண்மை எனவும் காட்டிற்று, நாட்டுபற்றாளர் நம்பிக்கை எதுவும் பொய்த்ததில்லை. அவர் தான் நிர்மலா சீத்தாராமன். உலகில் விரல் விட்டு எண்ணும் மிக உயர்ந்த வரிசை பெண்களில் ஒருவர், இன்று இந்திய நிதியமைச்சர்.
அவர் முதலில் வர்த்தகதுறை இணை அமைச்சராகத்தான் பதவியேற்றார். அதில் அவர் செய்த மிக நுணுக்கமான சீர்திருத்தமே இந்திய ஜவுளிதுறைக்கு அஸ்திவாரமான நூல் சந்தையினை சீன பிடியில் இருந்து விடுவித்தது. அவர் செய்த சீர்திருத்தங்கள் அன்றே சீன இறக்குமதிக்கு கடிவாளமிட்டு இந்திய உற்பத்திக்கு முன்னுரிமை பெற வழிசெய்தது.
அவரின் திறமையினை கண்டு மிக முக்கியத்துவமான ராணுவ அமைச்சர் பதவியினை மோடி கொடுத்திருந்தார். மகா சிரமமான பணியும் அதுவே. உலகில் ஆயுத தொழில் கச்சா எண்ணெய், தங்கம் எல்லாம் விட சக்தி வாய்ந்தது. அள்ள அள்ள குறையா பணம் கொடடும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறையின் அமைச்சர் பதவி அது, கொட்டி கொடுக்க பன்னாட்டு கம்பெனிகள் குனிந்து நிற்கும் துறை அது. அதில் பணத்துக்கு அப்பாற்பட்டு நிற்க தனி குணம் வேண்டும், நிர்மலா அதில் வென்றார். ராணுவ அமைச்சர் ஒரு நாட்டில் ஆயுதம் கொள்முதல் செய்யும் பொழுது ஏகபட்ட அரசியல் இம்சைகள் நடக்கும், சர்வதேச கம்பெனிகள் இந்தியாவில் இருக்கும் தங்கள் அல்லக்கை கட்சிகள் மூலமாக பல இடைஞ்சல் கொடுக்கும். அதையும் தாண்ட வேண்டும்.
நிர்மலா காலத்தில் அதை அவர் திறம்பட செய்தார். அவரின் அதி உச்ச சாதனை அப்பொழுது ரஷ்யாவிடம் எஸ் 400 சாதனத்துக்கு கையெழுத்திட சென்றது, அமெரிக்க மிரட்டல் இதர சிக்கல்களை சமாளித்து அந்த ஒப்பந்தத்தில் இந்தியா சார்பாக நிர்மலா கையொப்பமிட்டபொழுது உலகமே அவரை கூர்ந்து கவனித்தது.
இன்று சில சர்ச்சைக்கு உள்ளானாலும் அன்று எஸ் 400 அதிகபட்ச தொழில்நுட்ப திறன் கொண்ட உயர் சாதனமாக கருதபட்டது. சில பத்திரிகைகள் அன்றே அவரை இரண்டாம் இந்திரா காந்தி என எழுதின. தமிழக பத்திரிகைகளில் அது வராமல் பார்த்து கொள்ளபட்டு கூடுதலாக 2018ல் நிர்மலாவின் கார் தாக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒரு தேசியவாதி தாக்கப்பட்டால் அவர் நாட்டுக்கு நல்லது செய்கின்றார் என பொருள். இந்திரா அப்படித்தான் முன்பு தாக்கப்பட்டிருந்தார். ரபேல் விமானத்தின் சர்ச்சைகளை தாண்டி, ஊழல் இல்லை என நிரூபித்து அவைகளை இந்தியா பெற முழு காரணமாக இருந்தார் நிர்மலா. அது மிகப்பெரும் சாதனை.
அவர் காலத்தில் ராணுவம் முழு பலம் பெற்றது. ஒரு கட்டத்தில் புல்வாமா தாக்குதல் நடக்க, அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிர்மலாவின் கடும் நடவடிக்கையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தானை தாக்கின. எத்தனையோ முறை முன்பு அடிவாங்கிய இந்தியா நிர்மலா தலைமையில் திருப்பி அடித்த பொழுது உலகமே கைதட்டியது.
நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புதுறையில் செய்த சீர்திருத்தமே இப்பொழுது சீன நெருக்கடியில் தேசத்தை வலுவாக காத்து கொண்டிருக்கின்றது. நிர்மலா பதவிக்கு வந்த நாளிலிருந்து இலங்கை கடற்படை அடக்கி வாசித்தது என்பது இன்னொரு விஷயம்.
முதல் ஆட்டத்தில் தேசத்தை பலமான ராணுவபாதைக்கு இழுத்து சென்ற நிர்மலா அடுத்த ஆட்டத்தில் பொருளாதாரத்துறை அமைச்சரானார். ஒரு தமிழ்பெண் தொடர்ந்து அமைச்சராக அதுவும் மகாமுக்கிய அமைச்சராக பதவியேற்றது அதுதான் முதல்முறை.
பொருளாதாரத்தில் பலத்த சீர்திருத்தம் கொண்டு வந்தார், பற்பல விஷயங்களில் அவர் செய்த மாறுதல் நல்ல பலனை கொடுத்திருந்தது. ஆனால் எதிர்பாரா விதமாக உலகமே அதிரும் வண்ணம் கொரோனா தாக்கி அமெரிக்கா போன்ற நாடுகளே திணறிய பொழுது இந்திய பொருளாதாரத்தினை தாங்கி நிற்கின்றார்.
அதுவரை நிர்மலா என்ன கிழித்தார் என்றவர்கள் அவசரகால நிதியாக கொரோனா காலத்தில் 20 லட்சம் கோடியினை அவர் அறிவித்த பொழுது வாய்மூடி நின்றார்கள். அந்த 20 லட்சம் கோடியில் தான் இந்தியா கொரோனா காலத்திலும் பொருளாதாரத்தை உயிரோடு வைத்திருக்கின்றது.
அந்நேரம் மோடி விவசாயிகளுக்கு அறிவித்த `19 ஆயிரம் கோடி நலதிட்டமும் நிர்மலாவின் மிக சிறந்த நிர்வாகத்தில் ஒன்று. சீனாவும், அமெரிக்காவும், ஜப்பானும், தென்கொரியாவுமே தடுமாறி நிற்கும் பொழுது இந்திய பொருளாதாரம் தாக்குபிடித்து நிற்கும் அதிசயம் நிர்மலாவால் நடந்து கொண்டிருக்கின்றது.
வங்கிகளை இணைத்தது, வாராகடன்களை மீட்க வழிவகை செய்தது என நிர்மலா செய்து கொண்டிருக்கும் சாதனைகள் ஏராளம். சிக்கலான நேரத்தில் ஆட்சிக்கு வந்த நிர்மலா, மிக அழகாக நாட்டை நடத்தி செல்கின்றார். சீனா நெருக்கடிக்கு உள்ளான இந்நேரம் சீனாவினை விட்டு வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் உள்ளே இழுக்க அனைத்து காரியங்களையும் செய்து கொண்டிருகின்றார் நிர்மலா.
கொரோனாவில் இருந்து மீண்ட உலகத்தை உக்ரைன் யுத்தம் முடக்கினாலும் நிர்மலாவின் வழிகாட்டலில் தேசம் நிலைத்து நிற்கின்றது. தேச கப்பலை அழகாக நடத்தி செல்கின்றார் நிர்மலா. ஆசியாவில் குறிப்பாக தெற்காசியாவில் மிகபெரிய பொருளாதார முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. பர்மா, வங்கதேசம், தாய்லாந்து, இந்தோ சீன நாடுகளெல்லாம் பெரும் குழப்பத்தில் சிக்கியிருக்கின்றன. இலங்கை, மக்கள் புரட்சிக்கு உள்ளாகி மிகபெரிய இக்கட்டில் இருக்கின்றது. பாகிஸ்தானும் மீளமுடியா நெருக்கடிக்கு தள்ளப்பட்டு தவிக்கின்றது.
இன்று அந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பலமுள்ள நாடுகள் இரண்டு தான். ஒன்று சீனா இன்னொன்று இந்தியா. சீனாவின் அடக்குமுறையான அரசின் தன்மையே வேறு. அங்கு தேர்தல் இல்லை. கம்யூனிச அரசின் பேச்சை தவிர வேறு எதையும் சொல்லும் ஊடகம் இல்லை. டிவிட்டர் முகநூல் என எதுவுமில்லை. பெரும் இரும்புதிரை நாடு அது.
அங்கு 1975 முதல் பொருளாதார பாய்ச்சல் அதிகம். அந்நிய செலாவணி கையிருப்பு அதிகம். அதை கொண்டு எப்படியோ சமாளிக்கின்றார்கள் என்றாலும் முந்தைய ஆண்டைவிட அவர்கள் பொருளாதாரம் சரிந்திருப்பது நிஜம்.
ஆனால் இந்தியா அப்படி அல்ல, அது ஜனநாயக நாடு இங்கு கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஓயாத இரைச்சலும் சத்தமும் குழப்பமும் உண்டு. உலக அளவில் ஒரு சார்பான சுயநலம் கொண்ட கருத்து கந்தசாமிகளும், மனிதனை மனிதன் விழுங்கும் சுயநலவாதிகளும், ஊழல்வாதிகளும் நிறைந்த நாடு இந்தியா. இப்போது வங்கதேசத்தில் நடந்த பிரச்னை, பங்களாதேஷ் நாட்டில் நடந்த வன்முறைகளின் கூட இவர்களின் ஒருசார்பு நிலையையும், பற்றற்ற சுயநலத்தையும் தெளிவாக நாடே கவனித்தது. இது போன்ற ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பது மிக, மிக சிக்கலான விஷயம்.
அந்நிலையிலும் மிக வலுவான பொருளாதாரத்தை கொண்டு ஆசியாவின் வலுவான நாடு என அது இன்று தனித்து நிற்க இந்திய நிதியமைச்சர் மிகப்பெரும் காரணம். கொரோனாவில் இருந்து தேசத்தை மீட்க அவர் அறிவித்த 19 லட்சம் கோடி நிதியில் தான் இப்பொழுதும் மாநில அரசுக்கு வட்டியில்லா கடன் என அவர் அறிவித்ததில் தான் தேசம் தலைநிமிர்ந்து நிற்கின்றது. மிக சரியான நேரத்தில் சரியான இடத்தில் அமர்ந்து தேசத்தை காத்திருக்கின்றார் நிர்மலா சீத்தாராமன்.
இன்று உலக நாடுகள் ஜெர்மனியினை நிமிர வைத்த ஏஞ்சலோ மார்கலுக்கு நிகராக நிர்மலா சீதாராமனை கொண்டாடுகின்றன. அவரைத்தான் ஊறுகாய் மாமி, பாப்பாத்தி, இன்னும் சில வார்த்தைகளை கொட்டி சில கட்சிகள் கரித்து கொட்டின. இன்று அந்த பெண்மணியின் மிகசிறந்த பொருளாதார நடவடிக்கைதான் தேசத்தை தாங்கி நிற்கின்றது.
நிர்மலா பிரபலமான அரசியல் தலைவரின் மகளோ மருமகளோ அல்ல. அவர் குடும்பம் அரசியலில் இருந்ததுமில்லை. எப்படி இவ்வளவு பெரும் இடத்தை பெற்றார் நிர்மலா. இன்று நிதியமைச்சராக அவரை தெரியும் ஆனால் சிவகாசி, தூத்துக்குடி என பல இடங்களில் களப்பணி செய்து நாடு முழுக்க ஒரு பரதேசியாய் அலைந்து தேசத்தை முழுக்க படித்துத்தான் அவர் அந்த இடத்துக்கு வந்தார் என்பது பலருக்கு தெரியாது.
இப்போது தேசத்தின் மகத்தான தலைவராக அறியப்படுகின்றார் நிர்மலா. நிச்சயம் அந்த அறிவான தைரியமான தமிழச்சியின் சேவை அளப்பறியது. கை நிறைய வளையலும், வகை வகையான உடையும், முகம் நிறைய ஒப்பனையுமாக பெண் எம்பிக்கள் (தமிழக எம்பிக்களும்) வரும் பாராளுமன்றத்தில் நூல் சேலையும் ஒப்பனையற்ற முகமுமாக, வயலுக்கு வேலைக்கு செல்லும் பாமர பெண்போல் வரும் அந்த நிர்மலாவின் எளிமை அளப்பறியது.
எல்லா கேள்விக்கும் எல்லா பதிலையும் நுனியில் வைத்திருக்கும் அந்த துல்லியம் அளப்பறியது. புயல் காலம் போன்ற காலங்களில் தமிழ்நாட்டுக்கு அவர் ஓடிவந்து ஆற்றிய சேவைக்குத்தான் அவர் மேல் தாக்குதல் நடந்தது எனினும் அவர் பின்வாங்கினாரா என்றால் இல்லை எனலாம். அந்த தைரியம் வாழ்த்துக்குரியது
நிர்மலா பாதுகாப்பு அமைச்சராக இருந்தபொழுது சென்னை ஆவடியும், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையும் பெரும் வேலை வாய்ப்புகளை பெற்றன, அதை மறுக்க முடியாது. தேசிய அமைச்சராக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு தன்னால் முடிந்த சேவையினை செய்து கொண்டே இருந்தார். ராணுவத்தை காத்த மாதரசி இப்பொழுது தாய் போல் இந்திய பொருளாதாரத்தையும் காத்து கொண்டிருக்கின்றார். ஒரு விஷயம் அவரின் எதிரிகளும் ஒப்புகொள்ள கூடியது, அது அவரின் நேர்மை.
தொடர்ந்து அமைச்சராக அதுவும் மகா சக்திவாய்ந்த பதவியின் அமைச்சராக இருந்தும் ஒரு துளி தங்கம் கூட அவர் அணிந்தவரில்லை. வித விதமான கார்களில் வந்து வகை வகையான சொத்துக்களை அவரும் வளைத்ததில்லை. அவர் கட்சிக்காரர்களும் வளைத்ததில்லை. அவர் கண்ணசைத்தால் எத்தனையோ பிரமாண்ட கம்பெனிகளின் பங்குகள் அவர் காலடிக்கு வந்திருக்கும். திருப்பதி பெருமாளை விட கோடிகணக்கான தங்கம் அவர்முன் குவிந்திருக்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டி நாட்டுப்பற்று எனும் ஒரே ஒரு நோக்கில் உழைத்து கொண்டிருக்கின்றார். அவரின் குடும்பத்தாரை எங்காவது காணமுடியுமா? அரசியல் அழிச்சாட்டியத்திலோ இல்லை வேறு விவகாரங்களிலோ அவர்கள் தென்பட்டார்களா? இல்லை.
ஒரு விழாவில் தேசத்துக்காய் குடும்ப உறுப்பினர்களை இழந்த தாய்மார்களின் காலில் விழுந்து வணங்கினார் நிர்மலா. அப்படி ஒரு பண்புகளை கொண்டவர்.
தமிழக பெண்கள் யாரை முன்னுதாரணமாக கொண்டு தேசியத்தில் கலந்து இந்நாட்டையும் மாநிலத்தையும் வளர்க்க உறுதி பூண வேண்டும் என்றால் அதில் நிர்மலாவுக்கும் இடம் உண்டு. அவர் பிறந்தது சாதாரண குடும்பமே, அவரின் கல்வியும் தேசபற்றும் நேர்மையும் அவரை இந்த இடத்துக்கு கொண்டு சென்றது. அவரின் பணிவும் எளிமையும் அசாத்தியமானது சமீபத்தில் உலகின் மிக முக்கிய நாட்டின் சக்திவாய்ந்த நிதியமைச்சரான அவரது மகள் திருமணம் மிக மிக எளிமையாக நடந்தபோது ஆச்சரியபடாதவர் யாரும் இருக்க முடியாது.
அந்த "ஸ்ரீரங்கத்து தேவதை" தாரணியில் தொடர்ந்து மின்னி பாரத பெருமையினை உயர்த்த ஸ்ரீரங்கத்து நாதன் அருள் புரியட்டும்.