அ.தி.மு.க.,வில் எழும் கலகக்குரல் : உதவிக்கு வருகிறாரா தமிழிசை..?
அ.தி.மு.க.,வில் எழும் கலகக்குரலை அடக்க தமிழிசை சவுந்திரராஜன் உதவிக்கு வருகிறாரா என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது.;
அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து பா.ஜ.க., நிர்வாகிகள் பலர் கூறியதாவது:
கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஓர் விஷயம் தமிழிசை சவுந்திரராஜன். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தின் வாரிசு தமிழிசை சௌந்தரராஜன். இவரது தந்தை வார்த்தைகளின் வித்தகர் குமரி அனந்தன். இவர் காந்தி காமராஜர் என்கிற கட்சிக்கு சொந்தக்காரர் முன் ஒரு காலத்தில்.
இவரது மகள் தமிழிசை சவுந்திரராஜன் தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி முன்னாள் தலைவர். தற்சமயம் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். தென் சென்னையில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தவர். அரசியலில் அளப்பரிய ஆர்வம் இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே உண்டு.
அரசியலில் நல்லதொரு முகமாக பார்க்கக்கூடியவர். சூது வாது அறியாதவர். இரண்டு நாட்களுகு்கு முன்னர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். ஏன், எதற்கு என்பதெல்லாம் தெரியாது. ஆனால் தற்போது அது அவரை கடுமையான சிக்கலில் தள்ளியிருக்கிறது. கிட்டத்தட்ட குமரி அனந்தனுக்கு நடந்தது போலவே.
அது 1996 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல். நாடாளுமன்றத்திற்கும், சட்டபேரவைக்கும்... அன்றைய முதல்வர் ஜெயலலிதா மீது ஏகப்பட்ட விமர்சனங்கள். ஏற்கனவே கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் அவருடனே கூட்டணி என்றார்கள். பொங்கி எழுந்தவர்கள் மூப்பனார் தலைமையில் தனிக்கட்சி கண்டனர். ஏனோ பொங்கி எழுந்த சமயத்தில் உடன் இருந்த குமரி அனந்தன் தனிக்கட்சி கண்ட போது இல்லை. காங்கிரஸிலேயே தங்கி விட்டார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாதது போன்ற சூழல் நிலவியது. குமரி அனந்தன் மாத்திரம் தலைமைக்கு கட்டுப்பட்டார். அதனால் அவரே தலைவர் ஆனார் அன்று. பிறகு சாகும் வரை படாத அவஸ்தை பட்டார்.
இத்தனைக்கும் வசந்த்&கோ உரிமையாளர் இவரது குடும்பத்தார் தான். அன்று அப்படி வந்த தமிழ் மாநில காங்கிரஸ் இன்று பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது என்பதெல்லாம் தனிக் கதை.
விஷயம் என்னவென்றால் இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு இருந்தால் திமுக வெற்றி பெற்று இருக்காது என்று பதில் கொடுத்து இருக்கிறார். இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கேள்வி பதில் ஒன்றில் தங்கள் மீது தவறில்லை. அண்ணாமலை தான் பிடிவாதம் பிடித்தார். அதனால் இழப்பினை சந்தித்தார் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆக இது இரண்டும் சேர்ந்து சிக்கலாகி இருக்கிறது. இவரது பேச்சு பாரதிய திராவிட ஜனதா கட்சி என்பது போலான பாவனை ஏற்படுத்தி விட்டது. அதே வேலுமணியிடம் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோற்றதற்கு பாஜக எங்களோடு கூட்டணியில் இருந்தது தான் காரணம் என அக்கட்சியில் பலரும் வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறார்களே எனக் கேள்வி கேட்கவும் இல்லை.
அல்லது தற்சமயம் வெளிவரும் போது சிறுபான்மையினர் சமூகம் நலம்...பாவக்காய் பலாக்காய் என்றெல்லாம் பேசினீர்களே என யாரும் கேட்கவும் இல்லை.
சரி தமிழிசை ???
அவரும் முன்னாள் தலைவர் என்கிற ரீதியில் செயல்படுவேன் நடவடிக்கை எடுப்பேன் என்றெல்லாம் வெட்டி வீரம் பேசி இருக்கிறார். பரட்டை தலைக்கு பொங்கி இருக்கிறார். இது பரட்டையாக இருந்தாலும் ஒரிஜினல் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.
ஒன்றை மறந்து இருக்கிறார் .... இன்று மாநில தலைமை அண்ணாமலை என்பதையும் அவர் கீழ் தான் இந்த தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறார் என்பதனையும் சுலபமாக மறந்து விட்டிருக்கிறார். ஆனால் அதேசமயம் அவருக்கு அண்ணாமலையை எதிர்க்கும் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. அவருடைய நினைவு அவர் காலத்தில் அவர் கட்டுப்பாட்டில் இருந்த பாஜக போலும் என்றே இன்றளவும் நினைத்து கொண்டு இருக்கிறார்.
வெகு தூரம் வந்தாகிவிட்டது. திராவிட சித்தாந்த மாயை வேரறுக்கும் வேலை ஏகப்பட்டது இருக்கின்றது. உங்கள் காலத்தில் இருந்த பாஜக அல்ல இது. நீங்கள் டாக்டர் ஆனதற்கே கலைஞர் தான் காரணம் என்கிற பம்மாத்துக்கெல்லாம் மயங்கி நிற்பவர்கள் அல்ல தற்போது உள்ளவர்கள்.
தவிர நீங்கள் செய்தது போலான நாசூக்கான பாணியில் தற்சமயம் இங்கு தமிழகத்தில் அரசியல் செய்திட முடியாது. இன்னமும் மூன்று நான்கு அண்ணாமலைகள் வேண்டும். அப்படி இருக்கிறது களம். உங்கள் காலத்தில் இருந்த போது வந்த எத்தனை அற்புதமான வாய்ப்பை தள்ளிவிட்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு இன்னமும் புரியவில்லை. கலைஞர், ஜெயலலிதா காலத்தில் இருந்த அரசியல்வாதியாக நீங்கள் இருக்கலாம்...... ஆனால் ஜெயலலிதா மறைவின் போதான இடத்தில் கனகச்சிதமாக காய் நகர்த்தி காரியங்களை சாதித்து காட்டி இருக்க வேண்டும். அதனை எல்லாம் விடுத்து ரயில் நிலையத்திற்கு பெயர் மாற்றதிலிருந்து சிற்பல அற்பமான வேலைகளில்...... அல்லது வேலைகளுக்கு துணை நின்று இருக்கிறீர்கள்.
அடுத்ததாக அதிமுகவின் உட்கட்சி விவரங்களுக்கு.... அல்லது விவகாரத்தில் சரியான சாதுர்யமான முடிவு எடுக்கத் தெரியவில்லை..... அல்லது சரியாக வழி நடத்தவும் இல்லை. அப்படியே விட்டிருந்தால் அவர்களாகவே காணாமல் போய் விட்டிருப்பார்கள். அத்தனை நெல்லிக்காய் மூட்டை அவர்கள். இன்றும் அப்படியே......
உங்கள் கண்களுக்கு அதிமுக வாக்கு வங்கி தெரிகிறதே தவிர பாஜகவின் வாக்குகள் வளர என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்பதை சற்றே யோசித்து பார்த்தாலே போதும். ஒவ்வொருவரும் ஒரு பாணி... ஒரு பார்வை...
தற்போதைய மாநிலத் தலைமை பாணி சரியா தவறா என விவாதிக்க இடம் இருக்கிறது. பொதுவெளியில் பேசும் சமயம்.... நாம் சொல்லும் வார்த்தைக்கு, வெவ்வேறான அர்த்தம் கற்பிக்கும் தற்போதைய சூழ்நிலையில் நாமே அந்த அர்த்தத்திற்கும் பொறுப்பு ஏற்க வேண்டி வரும்.
ஊடகங்கள் பற்றவைக்கும் தீ.... அதிமுகவில் எழும் கலக குரலை அடக்க பயன்படுகிறது. அதற்கு நீங்கள் பயன்படுத்தப்படுகிறீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இவ்வாறு கூறியுள்ளனர்.