பா.ஜ.க.,வின் ஸ்டார் தொகுதியா விருதுநகர்?
தமிழகத்தில் பா.ஜ.க., போட்டியிடும் தொகுதிகள் பட்டியலில் விருதுநகர் இடம் பெற்றது எப்படி?;
சிவகங்கை தொகுதி குறித்து பா.ஜ.க.,வினர் கூறியதாவது: ஒரு காலத்தில் பா.ஜ.க. போட்டியிடும் பாராளுமன்ற தொகுதிகள் தமிழ்நாட்டில் எது என்று கேட்டால் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தென்சென்னை, சிவகங்கை என்று சொல்வார்கள். இன்று தென்தமிழகத்தில் விருதுநகர் போன்ற தொகுதிகள் பா.ஜ.கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள ஸ்டார் தொகுதிகள் என்று மக்களும் மீடியாக்களும் கட்சி நிர்வாகிகளும் பேசி வருகிறார்கள் என்றால் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் மேற்கொண்ட உழைப்பு தான். உண்மையில் அவர் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மேற்கொண்ட 3 வருட இடைவிடாத உழைப்பு மிக, மிக முக்கிய காரணம்.
அப்படி என்ன செய்து விட்டார் என்கிறீர்களா?
பட்டியலை பார்க்கலாம்.
1.தொழில்துறையினர் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளார். 2. சிவகாசியில் ரயில் நின்று செல்வதற்கு வழிவகை செய்துள்ளார். 3. சாத்தூர் போன்ற பகுதியில் அழிவின் விழிம்பில் இருந்த தீப்பெட்டி தொழிலை மீட்டு கொண்டு வந்துள்ளார். 4. மறவர் வலையர் நல வாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 5. திருமங்கலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதற்கு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக பணிகளும் தொடங்கி உள்ளன.
6. சிவகாசியில் பட்டாசு தொழிலுக்கு பிரச்சனை வந்த நேரத்தில் சுப்ரீம்கோர்ட் வரை சென்று பட்டாசு தடையை நீக்கினார். 7. தேவேந்திரர் அரசாணை நிறைவேற்ற பாடுபட்டார். 8. அழகுமுத்துக்கோன் தபால்தலை வெளியிட்டார். 9. விருதுநகர் அருப்புக்கோட்டையை மையப்படுத்தி 2000 ஆயிரம் கோடியில் ஜவுளி பூங்கா வருவதற்கு பல போராட்டங்கள் நடத்தி தன் மீது பல வழக்குகள் வந்த போதும், கைது செய்யப்பட்டோதும், சாதித்து காட்டியுள்ளார்.
10. திருப்பரங்குன்றம் தொகுதி வடபழஞ்சியில் நிலுவையிலுள்ள ஐ டி பார்க்கை திறக்க வலியுறுத்தி பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்து முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். அனைத்து சமுதாய மக்களிடமும் நல்லுணர்வை வளர்ந்து புல், பூண்டு கூட முளைக்காத ஒரு கெத்தக பூமியில் தாமரை இன்று மலரும் என்ற நம்பிக்கையை உருவாக்கி உள்ளார். இவ்வாறு கூறினர்.