சர்வதேச யோகா தினம் - பிரதமர் மோடி உரை
கொரோனாவுக்கு எதிராக உலகம் போராடி வரும் நிலையில் நம்பிக்கை ஒளிக்கீற்றாக யோகா ஆசனங்கள் உள்ளன.;
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு உரையாற்றினார் அப்போது அவர் இந்தியாவில் யோகாவின் முக்கியத்துவமும், ஆர்வமும் அதிகரித்துள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யோகாவை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். கொரோனாவால் 2 ஆண்டுகளாக யோகா நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்படாமல் போனாலும் யோகா மீதான ஆர்வம் குறையவில்லை.
மனதை ஒருமுகப்படுத்துவதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது என தெரிவித்த பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிராக உலகம் போராடி வரும் நிலையில் நம்பிக்கை ஒளிக்கீற்றாக யோகா ஆசனங்கள் உள்ளன என தெரிவித்தார்.
பின்னர்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்-என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.