கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 14 சுயேட்சைகள் வெற்றி!

கமுதி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 14 வார்டுகளில் சுயேட்சை வெற்றி; 1 வார்டில் பாஜக வெற்றி.;

Update: 2022-02-22 06:00 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு 15 வார்டுகள் உள்ளன. 15 வார்டுகளுக்கு 46 பேர் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், மனுக்கள் வாபஸ் பெற்றபோது, 1, 4, 5, 7, 8, 10, 11,12, 13, 14, 15 ஆகிய (11) வார்டுகளின் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிற 4 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. கமுதி பேரூராட்சிக்கு திமுக போட்டியிடவில்லை. அதிமுக ஒரு வார்டில் மட்டும் போட்டியிட்டது. 4 வார்டுகளில் பாஜக போட்டியிட்டாலும் 14 வது வார்டில் பாஜக சார்பில் சத்யா என்ற பெண் வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News