அண்ணாமலை வேலை பார்த்த இடங்களில் பாஜ வெற்றி எப்படி?

கர்நாடகாவில் உள்ள 10 மாவட்டங்களில் தமிழர்கள் அதிகம் வாழும் 86 தொகுதிகள் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது.

Update: 2023-05-14 04:30 GMT

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (பைல் படம்). 

உடுப்பி- சிக்கமகளூரு 8 தொகுதிகள், தாவணகெரே 7 தொகுதிகள், ஷிவமொகா 7 தொகுதிகள், கோலார் 6 தொகுதிகள், மாண்டியா 7 தொகுதிகள், ஹாசன் 7 தொகுதிகள், தட்சிண கன்னடா 8 தொகுதிகள், பெங்களூரில் 28 தொகுதிகள், உத்தர கன்னடா 6 தொகுதிகள் என்று அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த தொகுதிகளில் பாஜக பல பகுதிகளில் மோசமாக அடி வாங்கி உள்ளது. அதன்படி, தாவணகெரேவில் உள்ள 7 தொகுதிகளில் பாஜக ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் 5ல் வென்றுள்ளது. சுயேட்சை ஒரு இடத்தில் வென்றுள்ளது. உடுப்பி - சிக்கமகளூரில் - 4ல் பாஜக வென்றதுள்ளது. 4ல் காங்கிரஸ் வென்றுள்ளது. ஷிவமொகா 7 தொகுதிகள்- 1ல் பாஜக வென்றுள்ளது. 6ல் காங்கிரஸ் வென்றுள்ளது. கோலார் 8 தொகுதிகள்- 5ல் காங்கிரஸ் வென்றதுள்ளது. 3ல் மஜத வென்றுள்ளது. பாஜக எங்கும் வெற்றி பெறவில்லை. மாண்டியா 7 தொகுதிகள் - 6ல் காங்கிரஸ் வென்றுள்ளது. 1 ல் மஜத வென்றுள்ளது. பாஜக எங்கும் வெற்றி பெறவில்லை. ஹாசன் 7 தொகுதிகள்- 4ல் பாஜக வென்றுள்ளது. 2ல் காங்கிரஸ் வென்றுள்ளது. 2ல் மஜத வென்றுள்ளது.

தட்சிண கன்னடா 8 தொகுதிகள்- 6ல் பாஜக வென்றதுள்ளது. 2ல் காங்கிரஸ் வென்றுள்ளது. பெங்களூரில் 28 தொகுதிகள்- 14ல் பாஜக வென்றதுள்ளது. 13ல் காங்கிரஸ் வென்றுள்ளது. 1ல் ,மஜத வென்றுள்ளது. உத்தர கன்னடா 6 தொகுதிகள் - 3ல் பாஜக வென்றதுள்ளது. 5ல் காங்கிரஸ் வென்றுள்ளது. அண்ணாமலை வேலை பார்த்த இடங்களில் பாஜக பெங்களூர், தட்சிண கன்னடா, ஹாசன் தவிர மற்ற இடங்களில் கடும் சரிவை பாஜக சந்தித்து உள்ளது. அண்ணாமலையை டெல்லி தீர்க்கமாக நம்புகிறது என்பது சமீபத்தில் நடந்த அண்ணாமலை - அமித்ஷா - எடப்பாடி சந்திப்பிலேயே உறுதியானது. இருந்தாலும், அண்ணாமலை டெல்லியிடம் நல்ல பெயர் வாங்க இந்த கர்நாடக தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இதில் அண்ணாமலை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தான் புலிகேசி தொகுதி. தமிழர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் அதிமுக, திமுகவிற்கும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் தான் தமிழர்கள் அதிகம் இருக்கும் புலிகேசி நகரில் தனித்து போட்டியிட அதிமுக முடிவு செய்து கடைசியில் பின்வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. இங்கே அதிமுக ஆதரவு இருந்தும் பாஜக வேட்பாளர் முரளி வெறும் 10624 வாக்குகள்தான் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாசா 87316 வாக்குகள் பெற்று வென்றார். இப்படி கர்நாடக தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு எதிராக உள்ள நிலையில் இது அண்ணாமலை அரசியலை எப்படி பாதிக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

Similar News