வசைபாடியவர்களும் வாழ்த்திய கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்

'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார்.;

Update: 2021-06-03 04:58 GMT



தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவர் கருணாநிதி. அவரை சுற்றியே தமிழக அரசியல் எப்போதும் இருக்கும். அவர் இன்று தனது 98 வது பிறந்த நாள். மேலும், சட்டமன்ற உறுப்பினராக அவர் 60 வருடத்தை கடந்தவர். இதில் முக்கிய விஷயம், அவர் கடந்த 60 வருடங்களாக தோல்விகளையே சந்திக்காமல் சட்டபை உறுப்பினராக தொடர்ந்தவர் இவர். இது இந்திய அரசியலில் எவரும் அடைய முடியாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

முத்துவேல் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சரும் ஆவார். 1969 ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ஜூன் 3- ம் தேதி ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

தனது இளமை பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருபெற்றது.இது திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் பிரிவாக இருந்தது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். தி.மு.க. கட்சியின் உத்தியோகபூர்வ செய்தித்தாளான முரசோலி வளர்ந்து அதன் உறுப்பினர்களுக்காக ஒரு பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார். கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் (1953) ஈடுபட்டது.

இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளகுடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரத்தில் மாற்றப்பட்டது. தி.மு.க. அந்த பெயரை கள்ளுகுடிக்கு மாற்ற வேண்டுமென விரும்பினார் . கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்து டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மற்றும் ரயில்களின் பாதைகளைத் தடுப்பதைத் தடுக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.

திமுகவின் அடிப்படை கொள்கையிலேயே முரண்படும் பாஜக, கலைஞரின் வைர விழாவிற்கு தங்களை அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படையாகவே தெரிவித்தது. அதுதான் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்கள் பலரும் அவரை எதிர்க்கலாம். ஆனால், அவரை ஒதுக்கி வைத்து விட முடியாது. அவர் மீது நெருப்பை உமிழலாம். ஆனால், அவரை வெறுத்து விட முடியாது. காரணம், இத்தனை வருட அரசியல் வாழ்வில் அவர் கடந்து வந்த பாதை, அவரின் தமிழ், அவரின் எழுத்து, அவரின் இலக்கியம், அவரின் பேச்சு, அவரின் உழைப்பு, அவரின் அரசியல் அணுகுமுறை, அவரின் சாதனை என்பதை யாரும் மறுக்க முடியாது. இவர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 07 ம் தேதி மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார்..

இவரைப்பற்றிய நினைவு துளிகள்...

கலைஞருக்கு எதிராக அரசியல் தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது முதல் அழைப்பிதழை கலைஞருக்குதான் கொடுத்தார். கருணாநிதி பற்றி விமர்சித்து அவர் பல மேடைகளில் பேசினாலும், அவர் மீது விஜயகாந்த்திற்கு பெரும் மதிப்பு உண்டு. அதனால்தான், கலைஞருக்கு 94 வது பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அந்த வாழ்த்து செய்தி செய்தியில் 94 வது பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவையின் 60 வது ஆண்டு விழா கொண்டாடும் உயர்திரு. மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவராக இன்றைக்கும் கலைஞர் அவர்கள் மட்டும்தான் இருக்கிறார். அதுபோல் எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தாலும், கலைஞருடைய அரசியல் அனுபவமும், அரசியல் தலைவர்களுடைய வயதும் சமமாக இருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடன் இருந்து மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும். உங்களுடைய பிறந்தநாள் விழாவும், சட்டபேரவையின் வைரவிழாவும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், திமுக மற்றும் கலைஞர் கருணாநிதி பற்றி கடுமையாக விமர்சிக்கும் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் 94 வது பிறந்தநாளில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் " திமுக தலைவர் கலைஞரின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், சட்டப்பேரவை வைரவிழாவும் நாளை கொண்டாடப்படுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன். 94 ஆவது பிறந்த நாள் காணும் நண்பர் கலைஞருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிக நீண்ட அரசியல் பயணம் கலைஞருடையது தான். திருவாரூர் மாடவீதிகளில் 14 வயதில் தொடங்கிய அவரது அரசியல் பயணம் ஈரோடு, காஞ்சிபுரம் வழியாக 80 ஆண்டுகளைக் கடந்து கோபாலபுரத்தில் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் 4 தலைமுறை தலைவர்களுடன் அரசியல் செய்த பெருமை கலைஞருக்கு மட்டுமே உண்டு. கலைஞருக்கும், எனக்கும் அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு.

தமிழகத்தின் நலனுக்காக செயத்தக்கவையை செய்யாமைக்காகவும், செயத்தக்க அல்லவற்றை செய்தமைக்காகவும் கலைஞரை நான் பலமுறை உரிமையுடன் விமர்சித்திருக்கிறேன். அந்த விமர்சனங்களை கலைஞர் ரசித்து இருக்கிறாரே தவிர, ஒருபோதும் வெறுத்தது கிடையாது. அதேநேரத்தில் தமிழகத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டதில் தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வழியின் கலைஞர் செய்த பங்களிப்பை ஒருபோதும் நான் மறுத்ததில்லை; அதை எவரும் மறுக்கவும் முடியாது. தமிழகத்தைக் கடந்து அகில இந்திய அரசியலிலும் கலைஞர் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

பொதுவாழ்வில் 80 ஆண்டுகளைக் கடப்பதும், சட்டப்பேரவை உறுப்பினராக வைரவிழா காண்பதும் பெரும் பேறு. அப்பேறு நண்பர் கலைஞருக்கு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொது வாழ்வில் நூற்றாண்டை கடந்தும் அவர் சேவையாற்ற வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய பெருமை மிக்க கருணாநிதி இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும்...  வசைபாடியவர்களும் வாழ்த்தும் இடத்தில் வாழ்ந்து இருக்கிறார் கலைஞர் கருணாநிதி. இன்று அவருக்கு 98 வது பிறந்தநாள் அனைவரோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.

Tags:    

Similar News