பிரதமர் மோடி கொந்தளித்த காரணம் என்ன..?!

சமீப காலமாக சீனா பற்றிய கவலை பலருக்கு அதாவது எதிர்கட்சியினருக்கு வந்திருக்கலாம்.

Update: 2024-04-14 07:37 GMT

அ.ம.மு.க., அமைப்பு செயலாளர் டாக்டர் கதிர்காமு. (முன்னாள் எம்.எல்.ஏ., தேனி மருத்துவக் கல்லுாரி முன்னாள் முதல்வர்)

அ.ம.மு.க.,வின் அமைப்பு செயலாளர் டாக்டர் கதிர்காமு கூறியதாவது:

அந்த தூத்துகுடி சீன ராக்கெட் படம் எப்படி வந்தது என தகவல் தெரியாவிட்டாலும் அதை கண்டதும் "இனி திமுகவே இருக்காது" என மோடி ஏன் கொந்தளித்தார் என்பதும் பலருக்கு புரியாமல் இருக்கலாம்.

விஷயம் அவ்வளவு தீவிரமானது. மோடியின் கொந்தளிப்பும் எதிர்கட்சிகளின் சீன பாசமும் பெரும் கவனத்துக்கு எடுக்க வேண்டிய விஷயமாகும்.  சீனா பற்றி இந்திய எதிர்கட்சிகளுக்கு நாட்டுபற்றோடு கூடிய கவலை எக்காலமுமில்லை. எல்லாம் அரசியல், சீனாவும் தன் இந்திய கைக் கூலிகளை கொண்டு ஏதும் குழப்பம் செய்ய  முடியுமா என பார்க்கின்றது.

காரணம் மோடி செய்திருக்கும் பெரும் முன் தயாரிப்பு அப்படியானது. உலக கணிப்புகள் எப்போதுமே சரியானவை. அவை உலகின் சில சக்தி வாய்ந்த நாடுகள் என்னென்ன செய்யும் என்பதை சரியாக கணிக்கும்.

புடின் உக்ரைன் மேல் பாய்வார் என்பதை பல உளவுத் தகவல்கள் 2012ல் இருந்தே சொல்லிகொண்டிருந்தன. ஆனால் பிப்ரவரி 21, 2022வரை புடினும் உக்ரைனை தாக்க மாட்டோம் என சொல்லிக் கொண்டே தான் இருந்தார். கடைசியில் நடந்தது என்ன. உளவுத் தகவல் அறிக்கை சொன்னது தான் நடந்தது.

ரஷ்யாவை போன்றே இப்படி ஒரு திட்டம் சீனாவிடமும் உண்டு. உக்ரைன் போரை உன்னிப்பாக கவனிக்கும் சீனா 2027ம் ஆண்டு வாக்கில் தைவான் மேல் பாயலாம். அதற்கு முன்னோட்டமாக அருணாசல பிரதேசத்தில் 2026ல் பாயலாம் எனும் வலுவான எச்சரிக்கைகள் உண்டு.

மோடி அரசு இந்த சவாலை எதிர்கொள்ளத்தான் முழு வீச்சில் தயாராகின்றது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மாபெரும் ராணுவ பயிற்சியை "ககன் சக்தி" என்ற பெயரில் தொடங்கிய இந்தியா... ராஜஸ்தான் எல்லையில் இந்த பயிற்சியை நடத்தியது.

பாகிஸ்தானும் சீனாவும் ஒன்றா சேர்ந்து தாக்கினால் எப்படி பதிலடி கொடுப்பது என்ற வகையில் இந்த பயிற்சியை வடிவமைத்த இந்தியா, அதற்கேற்ப இந்திய ராணுவ பயிற்சியினை பாகிஸ்தான் எல்லையில் நடத்தியது. விமானப்படைகளின் வழிகாட்டலில் இந்த பயிற்சிகள் நடைபெற்றன.

யுத்தம் என வந்தால் முந்திகொண்டு பாகிஸ்தானின் முக்கிய நிலைகளை இந்திய ராணுவம் கைப்பற்றும் வகையிலான பயிற்சி அது. தரைப்படையின் பலம் முழுக்க சோதிக்கப்பட்டது. பாகிஸ்தானை இந்தியா எளிதில் சமாளிக்கலாம். ஆனால் சீனா கொஞ்சம் பலமான நாடு.

சீனாவின் குறி அருணாச்சல பிரதேசம். அங்கு தரைப்படையின் பாய்ச்சல் அவசியம் என்றாலும் முக்கியமாக கைகொடுப்பது விமானபடையின் பலம் தான். இதனால் "தரங் சக்தி 2024" எனும் மாபெரும் விமானப்படை பயிற்சியினை (தரங்கம் என்றால் அலை என பொருள்) வரும் ஆகஸ்டு மாதம் இந்தியா நடத்த இருக்கின்றது. இந்தியாவின் இந்த திட்டம் உலகின் கவனத்தை பெறுகின்றது. சீனா பெரும் கலக்கத்தில் இருக்கின்றது. ஆம், இந்தியா தன் வரலாற்றிலே முதல் முறையாக உலக நாட்டு விமானங்களுடன் போர் பயிற்சி செய்கின்றது.

அதன்படி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றன. இப்போதைக்கு பிரான்ஸின் ரபேல், ஜெர்மன் டைபூன், பிரிட்டனின் யூரோ பைட்டர் உள்ளிட்ட பல விமானங்கள், இந்தியாவின் நவீன விமானங்கள் பயிற்சிக்கு வருகின்றன. இதனை விட முக்கிய விஷயம் அமெரிக்காவின் எப்16, எப் 22 விமானங்களும் வரலாம் என அறிவிக்கபட்ட நிலையில், தற்போதைய தகவல் உலகின் பலம் வாய்ந்ததாக கருதப்படும் அமெரிக்காவின் எப்35 ரக விமானமும் வர வாய்ப்பு உண்டு.

இது சாதாரண பயிற்சி அல்ல. இந்தியா குவாட் அமைப்பில் இருப்பதால் இந்தியாவினை தொட்டால் உலகமே இனி களமிறங்கும் என எச்சரிக்கும் வகையிலான போர் பயிற்சியாக இது மாறி உள்ளது.

உலகின் நவீன அதிசக்திமிக்க விமானங்கள் வருவதும் இன்னும் அவற்றின் பெரும் பலமும் சீனாவினை அச்சத்தில் வைத்திருக்கின்றது. காரணம் சீனாவிடம் பெரிய நவீன விமானம் கிடையாது. ரஷ்ய விமானங்களை மட்டும் நம்பியிருக்கிறது. அந்த விமானங்களை உக்ரைனிலே உலகம் போட்டு தள்ளிக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவின் ரபேல் விமானமே சீனாவுக்கு அச்சம் எனும் நிலையில் அமெரிக்க எப் 35 ரக விமானம் , டைபூன், யூரோ பைட்டர் ரகங்களை சமாளிக்கும் சக்தி சீனாவுக்கு இல்லை. சீனா அவசரமாக பதறுகின்றது. மோடியின் இந்தியாவில் தன் கனவு ஈடேறாது. மோடி தலைமையில் இருக்கும் இந்தியா மீது போர் தொடுத்தால், பெரும் தோல்வியினை சந்திப்போம் என சீனா அஞ்சுகின்றது.

அதனால் இந்த தேர்தலில் மோடியை வீழ்த்த வேண்டும் என எதிர்கட்சிகளை தூண்டி விடுகின்றது. எதிர்க்கட்சியினர் தங்களது பிரச்சாரத்தில், ‘சீனாவிடம் மோடி பின் வாங்குகின்றார் என்பதும் "அக்னிபாத்" திட்டம் ரத்து செய்யப்படும்’ என சொல்வதும் அதனால் தான்.

காங்கிரஸ் உட்பட எந்த இண்டி கூட்டணியின் தேர்தல் அறிக்கையிலும் "சீனாவிடம் இருந்து நிலங்களை மீட்போம்" என ஒரு வரி கூட இல்லாததும் கவனிக்கதக்கது. ஆக விஷயம் இதுதான்.

இந்தியா மேல் 2026 ம் ஆண்டு வாக்கில் தாக்கி அருணாசல பிரதேசத்தை கைப்பற்ற சீனா திட்டமிடுகின்றது. ஆனால் இது 1962ம் ஆண்டுமல்ல. இங்கு ஆட்சியில் இருப்பது காங்கிரசும் அல்ல. தற்போது பிரதமர் மோடி வலுத்து நிற்கின்றார்.

நேருவின் குழப்பமான வெளியுறவு கொள்கை, அணிசேரா கொள்கையினை குப்பையில் தள்ளிய அவர் இந்திய நலனுக்கான வகையில் கூட்டணி என அறிவித்தார். அதனால் இப்போது உலக ராணுவம் இந்தியாவுக்கு துணையாக வருகின்றது. இது முன்பு நடவாதது. இந்தியாவின் நேரு கொள்கை எந்த நாட்டோடும் சேரமாட்டோம், யார் அடித்தாலும் தாங்குவோம் என்பதாக இருந்தது.

இதில் பலனடைந்த நாடு ரஷ்யா. அது இந்தியா, சீனா என இருநாட்டு ராணுவத்திற்கும் ஒரே பொருளை விற்று சம்பாதித்தது, இரு நாடுகள் மோதினால் கூட தனக்கு லாபம் என்றபடி இருந்தது. கம்யூனிச ஆட்சி எனும் வகையில் அதற்கு இந்தியாவினை விட சீனாமேல் பாசம் அதிகம். மோடி அதை மாற்றினார். இந்திய ராணுவம் ரஷ்யாவை சார்ந்து இருப்பதில் இருந்து மீட்டு, இந்திய ராணுவத்தை சுயசார்புடன் கட்டமைத்தார். இதனால் சீனாவின் உண்மையான எதிரிகள் இப்போது இந்தியாவுடன் கை குலுக்கி வருகின்றன.

அதே நேரம் ரஷ்யாவிடம் இருந்தும் அவர் முழுக்க விலகவில்லை. இந்திய நலனுக்காக எண்ணெய் உள்ளிட்ட வியாபரங்களை தொடர்ந்தார். அதாவது எவ்வகையில் இந்தியா கவனமாக வெளியுறவு கொள்கையினை வடிவமைத்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார்.

இப்போது சீனா தன் கனவு தவிடுபொடியான கடுப்பில் இருக்கின்றது. இந்தியாவில் பலவீனமான தலைமை என்றேனும் ஒருநாள் வரும். அப்போது அருணாசல் பிரதேசத்தை எளிதில் கைபற்றலாம். அப்போது இந்தியாவில் இருக்கும் சில கட்சிகள் கூட துணைக்கு வரும் என கணக்கிட்டு திட்டத்தை மாற்றி அமைத்துள்ளது. இதனையும் கவனித்த பிரதமர் மோடி சீனாவிற்கு ஆதரவாக இந்தியாவில் செயல்படும் எதிர்க்கட்சிகளை முடக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதி தான், இப்போது நடக்கும் பல அரசியல் கைதுகள் என்பதை மறந்து விடக்கூடாது. மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றதும், நாட்டிற்கு எதிராக செயல்படும் எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். தான் பிரதமராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. இந்தியாவில் பலவீனமான ஊழல் தலைவர்கள் உருவாக கூடாது என்பதில் பிரதமர் மோடி மிகவும் கவனமுடனும் தீவிரத்துடன் செயல்படுகிறார்.

இந்த தீவிரம் இனியும் அதிகரிக்கும். இன்னும் பல தலைவர்கள் சிறைக்குள் செல்வதை விரைவில் பார்க்கலாம். இந்தியாவில் வலுவான தலைமை ஏன் தேவை என்பது இப்போது புரிகிறதா. இதனை எல்லாம் உண்ர்ந்து இந்தியாவை பாதுகாக்க மோடியின் தலைமையும், பா.ஜ.க.,வும் நாட்டிற்கு தேவை என்பதற்காகத்தான் டி.டி.வி. தினகரன் பா.ஜ.க.,வுக்கு முழுமையான ஆதரவு வழங்கி உள்ளார்.  என்.டி.ஏ., என்ற கூட்டணியில், என் பார் நரேந்திரமோடி, டி பார் டிடிவி தினகரன், ஏ பார் அண்ணாமலை என்று மூவரும் கை கோர்த்து உள்ளனர்.

இப்போது நடப்பது தேசத்தை பாதுகாப்பது தொடர்பான தேர்தல். தேசத்தை பாதுகாக்க வலுவான தலைமை தேவை. இதனை உணர்ந்து தமிழக மக்கள் பா.ஜ.க.,வுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தேனி தொகுதியில் பா.ஜ.க., கூட்டணி சார்பில் உள்ள வெற்றி வேட்பாளர் டி.டி.வி., தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News