மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் கடல்சார் மீன்வள மசோதாவை வேண்டாமென்று என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்;
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால், கடல்சார் மீன்வள மசோதாவை முன்மொழிய வேண்டாமென்று என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரின்போது ஒன்றிய அரசு நிறைவேற்ற உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021, "இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால், அதனை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாமென்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது என்றும், இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் மாநிலப் பட்டியலின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகளைக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.