திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி: வேலுமணி..!
கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நிகழ்ந்தது.;
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு சிங்கை ராமசந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். கழகத்திற்காக பணியாற்றி மறைந்த முன்னாள் எம்எல்ஏ சிங்கை கோவிந்தராஜனின் மகன்தான் இவர்.
சிங்கை கோவிந்தராஜனுக்கு எம்ஜிஆர் தான் திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு ராமசந்திரன் என பெயர் சூட்டியதும் எம்ஜிஆர் தான். பின்னர் அதிமுக ஐடி விங் மாநில செயலாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவர். மாதம் ரூ 15 லட்சம் ஊதியம் வாங்கிக் கொண்டிருந்த ராமசந்திரன் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கட்சிக்காக பாடுபட்டு வருகிறார்.
கோவையில் எந்த வேட்பாளர் நின்றாலும் கவலை இல்லை. அதிமுகவை அழிக்க நினைத்தார்கள் அது முடியவில்லை. தேர்தல் களத்தில் வெல்வது அதிமுகவாகத்தான் இருக்கும். மற்ற வேட்பாளர்கள் எல்லாம் நம் பக்கத்திலேயே வர முடியாது. அவர்கள் எல்லாம் தூசு! கோவையில் போட்டியிடும் திமுகவின் கணபதி ராஜ் குமார் தான் நமக்கு போட்டி! கணபதி ராஜ்குமாருக்கு அதிமுகவில் மேயர் பதவியையும் மாவட்டச் செயலாளர் பதவியையும் கொடுத்தோம். ஆனால் அவர் துரோகம் செய்து விட்டு திமுகவுக்கு சென்று விட்டார்.
பாஜகவுக்கு 4 சதவீதம் தான் ஓட்டு இருக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள பாமக, தமாகா மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஓட்டு உள்ளதா? எனவே நமக்கு போட்டி திமுக தான். அண்ணாமலைக்கு டேபாசிட் கிடைத்தாலே பெரிய விஷயம். இவ்வாறு வேலுமணி விமர்சித்திருந்தார்.