தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: எடப்பாடி பழனிச்சாமி கருத்து

தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-18 07:30 GMT

எடப்பாடி பழனிசாமி.

தமிழக அரசின், 2022-23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. எனினும், பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகவில்லை. நிதி நெருக்கடி நிலைமை சரியான பின் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று மட்டுமே அறிவிப்பு வெளியானது.

இது, பல தரப்பினர் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது. தமிழக பட்ஜெட் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், கொரோனா காலத்தில் அரசுக்கு வருவாயே கிடைக்கவில்லை; திமுக ஆட்சிக்கு வந்த உடன் வருவாய் வழிகள் இயல்பு நிலைக்கு திரும்பின.

தமிழக பட்ஜெட் ஏமாற்றம் தருகிறது. திமுக தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை, மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்படவில்லை" என்றார்.

Tags:    

Similar News