தமிழகத்தில் கூட்டணி சரியில்லை : விழி பிதுங்கிய தமிழக பாஜக..!
தமிழகத்தில் கூட்டணி சரியில்லாததால், அமித் ஷா அப்செட்? ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலுக்காக பாஜக பெரிய கூட்டணியை உருவாக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி சேர எந்த கட்சியும் வரவில்லை என்று டெல்லி பாஜக அப்செட்டில் இருக்கிறதாம். இதன் காரணமாகவே தற்போது எல் முருகனும் ராஜ்யசபாவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் பேச்சுவார்த்தை படுவேகத்தில் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடிந்து விட்டன என்றுதான் கூற வேண்டும். திமுக கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் திமுக - காங்கிரஸ் இடையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதன்பின் இந்த மாத தொடக்கத்தில் கூட்டணி கட்சியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்தியது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக கூட்டணி குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதில் கிட்டத்தட்ட கூட்டணி இறுதியாகி விட்டதாகவே தெரிகிறது.
அதன்படி இந்த முறையும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக , விடுதலை சிறுத்தைகள், இன்னும் சில உதிரி கட்சிகள் உடன் திமுக கூட்டணி வைக்க உள்ளது.
பாஜக அப்செட்:
இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலுக்காக பாஜக பெரிய கூட்டணியை உருவாக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி சேர எந்த கட்சியும் வரவில்லை என்று டெல்லி பாஜக அப்செட்டில் இருக்கிறதாம். இதன் காரணமாகவே தற்போது எல் முருகனும் ராஜ்ய சபாவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது திமுக எம்பி ஆ. ராசாவிற்கு ரூட் கிளியர் ஆகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் எல் முருகன் மீண்டும் தேர்வாகிறார். மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.
இதனால் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெரிதாக இல்லை. இதனால் திமுக எம்பி ஆ. ராசாவிற்கு பெரிய அளவில் இனி நீலகிரியில் போட்டி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்ணாமலை கோவை:
இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். கோவை தேர்தலில் கண்டிப்பாக நிற்க மாட்டேன். எனக்கு தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார், பாஜகவின் அண்ணாமலை.
என்ன சொன்னது டெல்லி?
தமிழ்நாட்டில் கூட்டணி அமையவில்லை. நீங்கள் நீலகிரியில் நின்றால் சரியாக இருக்காது. அதனால் ராஜ்யசபாவிற்கு வாருங்கள் என்று கூறி எல் முருகனை டெல்லி ம.பியில் இருந்து ராஜ்ய சபாவிற்கு அழைத்து சென்றுள்ளது. அதேபோல் இதே காரணத்திற்காக அண்ணாமலையும் தேர்தலில் நிற்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
கால அவகாசம்:
இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய பிப்ரவரி 18ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு உள்ளதாம். நீங்கள் நடைப்பயணம் செய்தது போதும். உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு உள்ளதாம். ஆனால் அதிமுக கூட்டணிக்கு பாமக, தேமுதிக செல்வதால் பாஜக கூட்டணிக்கு ஆள் வராத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாம். தமிழ்நாட்டில் கூட்டணி அமையாத காரணத்தால் டெல்லியில் நட்டா, அமித்ஷாவும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.