ஜூன் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். கூட்டறிக்கை!
வருகிற 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர்.;
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்டி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வருகறி 14ம் தேதி நண்பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் எங்களது தலைமையில் நடைபெற உள்ளது.
எம்எல்ஏக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்களை தவிர்த்து வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளனர்.