LIVE: அதிமுக பொதுக்குழு கூட்டம்
சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது;
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
முதலில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. செயற்குழுவை தொடர்ந்து பொதுக்குழு கூட உள்ளது.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
நத்தம் விஸ்வநாதன் தனி தீர்மானம் கொண்டுவந்து அதிமுகவில் இருந்து நீக்கினர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களான ஓரத்தநாடு வைத்திலிங்கம் ஜே சி டி பிரபாகரன் உள்ளிட்டவர்களும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் விபரம் பின்வருமாறு:
- அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்
- ஈ.வே.ரா., அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்
- அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்..
- அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்..
- அதிமுகவின் இடைக்கால பொது செயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்
- அதிமுக பொது செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்வது..
- அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்..
- மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல் பட்ட அதிமுக அரசின் வரலாற்று வெற்றிகளும்.
- அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம்...
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம்.
- சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.
- மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியிறுத்தல்.
- இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
- அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்.
- நெசவாளர் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுகவில் இருந்து ஒபிஎஸ்ஸை நீக்க பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை ரத்து செய்து புதிதாக துணைப் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார்
அதிமுகவில் புதிதாக துணைப் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சமாளிக்கும் விதமாக அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள்
இதுவரை இல்லாத அளவுக்கு பொதுச்செயலாளர் தேர்தலுக்கான விதிகளிலும் திருத்தம்!
அதிமுக பொருளாளர் பதவிக்கான அதிகாரங்கள் அனைத்தையும் பொதுசெயலாளருக்கு வழங்க சட்ட விதிகள் திருத்தம்
எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேறியது
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை ரத்து செய்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.