நாளை இறுதி பட்டியல் வெளியாகுமா? திமுக- அதிமுகவினர் படபடப்பு

நாளை இறுதி பட்டியல் வெளியானால் நாளை மறுநாள் தை அமாவாசையில் வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க - அ.தி.மு.க வேட்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Update: 2022-01-29 12:00 GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.- அ.தி.மு.க இரு கட்சிகளிலும் நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு பட்டியல் தயாராகி விட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் முடிவாகாததால் இறுதி பட்டியல் வெளியாவதில் தாமதம் ஆகிறது.


நாளை பட்டியல் வெளியானால் மட்டுமே நாளை மறுநாள் தை அமாவாசை மிகவும் நல்ல நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இல்லாவிட்டால் செவ்வாய்க்கிழமை பிரதமை நாள் வருகிறது. சாஸ்திர ரீதியாக அது மிகவும் உகந்த நாள் இல்லை.  உள்ளூர இருக்கும் தெய்வ பக்தியையும், சாஸ்திர சம்பிரதாயங்களையும் மீற இரு கட்சிகளின் வேட்பாளர்களுமே தயாராக இல்லை. ஓரிருவர் வேண்டுமானால் விதிவிலக்கில் இருக்கலாம்.


நாளை ஞாயிற்றுக்கிழமை இறுதிப்பட்டியல் வெளியானால், திங்கள் கிழமை மிகவும் நல்ல நாளில் அதாவது தை அமாவாசையில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஆனால் கூட்டணி கட்சி பேச்சுவார்த்தை வார்டு பிரிப்பு பங்கீட்டு பணிகள் நிறைவடையாமல் உள்ளதால் இரு கட்சிகளின் வேட்பாளர்களுமே படபடப்பான மனநிலையில் உள்ளனர்.

Tags:    

Similar News