அண்ணாமலை இல்லாத அரசியல் : பா.ஜ.க.,வினருக்கு திடீர் கட்டளை..!
அடுத்த நான்கு மாதங்கள் தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலை நேரடியாக இருக்க மாட்டார்.;
அண்ணாமலை இல்லாத அரசியல் காலத்தில் அவர் மூன்று முக்கிய செய்திகளை பதிவு செய்திருக்கிறார்.
1. எந்த சூழலிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி கிடையாது.
2. எந்த சூழலிலும் திமுக மீது சாப்ட் கார்னர் அப்ரோச் இருக்காது.
3. அதிமுகவோடு கூட்டணி வைத்தால் அதிமுகவின் வாக்குகளை வாங்கி எளிதாக சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிடலாம் என்னும் எண்ணத்தில் இருக்கும் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அந்த எண்ணத்தை கைவிட்டு விட வேண்டும்..
ஆக இருக்கும் கிரவுண்டில் இருக்கும் ரூல்ஸ் படி விளையாடி கோல் அடிக்க நினைப்பவன் தான் நல்ல விளையாட்டு வீரன், கோல் போஸ்ட்டை அகலப்படுத்துங்கள், பந்தை சிறிதாக்குங்கள் அல்லது எதிரணி வீரர்களை விலைக்கு வாங்குங்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்க முடியாது என்பதை மனதில் கொண்டு பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.
அதிமுகவோடு கூட்டணி வைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்கொண்டால் நிச்சயமாக பாஜகவுக்கு பத்துக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கிடைக்கும். அதில் உங்களை போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் எம்எல்ஏ ஆகிவிடுவார்கள். ஆனால் பாஜக என்னும் கட்சி எதிர்காலம் இல்லாமல் கொஞ்ச காலத்தில் இல்லாமல் போய் விடும். இதே போல் தமிழகத்தில் கூட்டணி வைத்து போட்டியிட்டு பல கட்சிகள் அழிவை சந்தித்துள்ளன.
ஆக கட்சியின் நீண்ட கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு பாஜக தலைமையை ஏற்று வரும் கட்சிகளோடு மட்டும் கூட்டணி வைத்து களப்பணி ஆற்றுங்கள். அதுதான் அந்த கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வரும் ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வரும் போது தான் அவர்களின் கொள்கைகளை நிறைவேற்ற முடியும் தொண்டர்களும் பயனடைவார்கள்.
சும்மா பெரிய கட்சிகளோடு கூட்டணி வைத்து பத்து எம்எல்ஏ ஆகிவிட்டால் வெறும் பத்து பேர் மட்டும் தான் பயனடைவார்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டால் கொள்கைகள் நிறைவேற்றப்படும் அதோடு லட்சக்கணக்கான தொண்டர்களும் பயனடைவார்கள்.