மின்வாரிய ஊழியர்கள் முன்கள பணியாளர்கள் - விரைவில் நடவடிக்கை அமைச்சர் உறுதி
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி;
மின் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மின்வெட்டு ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பணியாற்றி வரும் மின் ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்..