சென்னை பள்ளிக்கரணை ஆசான் தனியார் கல்லூரியில் நடந்த மாதாந்திர நிகழ்ச்சி
துறை சார்பாக குறும்படம் மற்றும் நிழற்படம் காட்சி படுத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சென்னை ஆசான் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையில் மாதாந்திர நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி பிரபலம் இரட்டை சகோதரர்கள் அருண் மற்றும் அரவிந்த் கலந்து கொண்டனர்.மேலும் கல்லூரியின் டீன் மற்றும் இயக்குநர் T.சாந்தி தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மேடையில் பேசினர். மேலும் துறை சார்பாக குறும்படம் மற்றும் நிழற்படம் காட்சி படுத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியில் அனைத்து துறை மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.