எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
அதிமுகவில் செங்கோட்டையன் - மணியானவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உள்ளனர்.
எடப்பாடி மீது அதிருப்தியில் சில பெரிய தலைகளும் உள்ளனர். அதனால் எடப்பாடிக்கு எதிராக இவர்கள் ஒரு குடையின் கீழ் சேருகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார். லோக்சபா 2024 தேர்தல் முடிந்த நிலையில் அதிமுகவில் லேசாக அதிருப்தி குரல்கள் எழும்ப தொடங்கி உள்ளன. தேர்தல் முடிவுகள் வந்ததும் அதிமுகவில் பூகம்பம் வெடிக்கலாம் என்று செய்திகள் உலா வருகின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல்கள் எழும்ப வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்த மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போதே செங்கோட்டையன் எம்எல்ஏவாக இருந்தவர். ஜெயலலிதாவை பாதுகாத்தவர் செங்கோட்டையன். சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட போது அவரை பாதுகாத்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா கோபமான நபர். ஆனால் அவரே அன்பாக பார்க்கக் கூடியவர் செங்கோட்டையன். செங்கோட்டையனை அவ்வளவு நம்பியவர் ஜெயலலிதா. லோக்சபா , சட்டசபை தேர்தல்களில் ஜெயலலிதாவிற்கு எல்லாமுமாகவே இருந்தவர் செங்கோட்டையன்.
ஆனால் திருப்பூர், ஈரோடு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு கூட எடப்பாடி செங்கோட்டையனிடம் ஆலோசனை கேட்கவில்லை. லோக்சபா தேர்தல் தொடர்பாக எதையும் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும் இதனால் செட்டாகவில்லை.
அதேபோல் அங்குள்ள கருப்பண்ணன் உடனும் செங்கோட்டையனுக்கு செட்டாகவில்லை. கருப்பண்ணன் எடப்பாடிக்கு நெருக்கம். உறவுக்காரர். இதே நிலைமைதான் தங்கமணிக்கும். கேவி ராமலிங்கம் இதேபோல் அதிருப்தியில் உள்ளார். இப்படி செங்கோட்டையன் - மணியானவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உள்ளனர். இவர்கள் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளனர்.
அதனால் எடப்பாடிக்கு எதிராக இவர்கள் ஒரு குடையின் கீழ் சேருகிறார்கள். செங்கோட்டையன் கீழ் இவர்கள் சேருகிறார்கள். அதேபோல் வேலுமணி மீது எடப்பாடி கோபத்தில் உள்ளார். காரணம் எடப்பாடி பழனிச்சாமி வேலுமணி சரியாக வேலை செய்யவில்லை என்று நினைக்கிறார். திமுகவை எதிர்த்து, பாஜகவை எதிர்த்து வேலுமணி சரியாக வேலை செய்யவில்லை என்று புகார் உள்ளது. அதனால் வேலுமணி தேர்தல் பணிகளை முழுமூச்சாக செய்யவில்லை என்று எடப்பாடி நினைக்கிறார்.
வேட்பாளர் நாயுடு என்பதால் எடப்பாடி அதிருப்தியில் உள்ளார். வேலுமணி சொல்லித்தான் அவரை எடப்பாடி தேர்வு செய்தார். இதை எடப்பாடி விரும்பவில்லை. அங்கே வேலுமணி வேலையே செய்யவில்லை என்ற புகார் உள்ளது. கடைசி மூன்று நாள் மட்டும் இல்லை.. தொடக்கத்தில் இருந்தே வேலை செய்யவில்லை என்று புகார் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறார். செங்கோட்டையன் தலைமையில் இவர்கள் எல்லாம் ஒன்றாக கூட போகிறார்கள். கொங்கு மண்டல லீடருக்கும் - டெல்லிக்கு - ஒரு சாமியாருக்கு இடையில் தொடர்பு உள்ளது. வேலுமணி, தங்கமணி, கேவி ராமலிங்கம் எல்லோரும் எடப்பாடிக்கு எதிராக திரும்ப உள்ளனர். இவர்கள் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேட்டியின்போது கூறியுள்ளார்.
தகவல் உதவி: மானஸ்தன்