அம்பானி வீட்டு கல்யாண செலவு செலவு ஐந்தாயிம் கோடியாம்..!

அம்பானி வீட்டு கல்யாண செலவு மட்டும் ரூ.5,000 கோடியை எட்டி உள்ளது.;

Update: 2024-07-12 04:31 GMT

அம்பானி குடும்பத்தினர் 

பிரபலமாக அதானியின் பெயர் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. உலக அளவில் பல பிசினஸ் ஒப்பந்தங்களை அதானி செய்துவருகிறார். பிரதமர் மோடி பதவிக்கு வந்த பிறகுதான் அவரது பெயர் இந்த அளவுக்கு பிரபலமாகி இருக்கிறது.

கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ஆடம்பரங்களுடன் ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது, கட்டுக்கதைகளும் அதைவிட பிரமாண்டமாகப் பரவும் அல்லவா? ‘அம்பானி வீட்டுக் கல்யாணத்தின் நேரடி ஒளிபரப்பு உரிமையை, அவர்களின் ஜியோ டி.வி-யைத் தோற்கடித்து ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளம் பெற்று விட்டது' என்று பரவிய ஒரு வதந்தி போதும்... அந்தக் கல்யாணத்தின் பிரமாண்டத்தைச் சொல்வதற்கு!

டாடா, பிர்லாவின் பெயர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அம்பானியும் அதானியும் இந்தத் தலைமுறையின் இந்தியப் பணக்காரர்களாக கோலோச்சி வருகிறார்கள். இந்தியர்களின் அன்றாட வாழ்வு, இவர்களின் தயாரிப்புகள் இல்லாமல் முழுமை பெறுவதில்லை. அதானி பெரும்பாலும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. அம்பானி குடும்பமோ எப்போதும் வெளிச்சத்தில் இருக்கிறது. முகேஷ் அம்பானி குடும்பத் திருமணம் தான் இப்போது உலகமே கவனிக்கும் விழா.

முகேஷ் அம்பானிக்கு மூன்று வாரிசுகள். மகள் இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்து விட்டது. இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணமே தங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறையின் கடைசித் திருமணம் என்பதால், கடந்த மார்ச் மாதம் தொடங்கி அதைக் கோலாகலமாக நடத்தி வருகிறார்.

ஆனந்த் அம்பானியின் பொறுப்பில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைக் கொடுத்திருக்கும் முகேஷ், மகனை உலகத் தொழிலதிபர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2022 டிசம்பரில் ராஜஸ்தானில் ஒரு கோயிலில் வைத்து எளிய முறையில் மகன் திருமண நிச்சயதார்த்ததை நடத்திய முகேஷ் அம்பானி, திருமணத்தை மட்டுமே உலகமே உற்றுப்பார்க்கும் வகையில் நடத்தி வருகிறார்.

மார்ச் இறுதியில் குஜராத் மாநிலத்தில் தனது பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம் இருக்கும் ஜாம்நகரில் 3 நாள்கள் திருமணத்திற்கு முந்தைய சடங்குகளை நடத்தினார் முகேஷ் அம்பானி. இதில் பில்கேட்ஸ், மார்க் சக்கர்பர்க், ஹிலாரி கிளின்டன், இவான்கா ட்ரம்ப் உட்பட உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள், தொழிலதிபர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் என 2,000 பேர் கலந்துகொண்டனர்.

ரிஹானா நடனமாடினார். இந்தியாவின் அத்தனை வகை உணவுகளும் பரிமாறப்பட்ட இந்த நிகழ்வுக்கு சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அடுத்து மே மாதம் 29-ம் தேதி முதல் ஜூன் 1 வரை ஆனந்த் அம்பானி தன் நண்பர்களுக்காக ஆடம்பர சொகுசுக் கப்பலில் பிரத்யேக பார்ட்டி கொடுத்தார். இதில் உலகம் முழுவதும் இருந்து 1,200 பேர் வரை கலந்து கொண்டனர். விருந்தினர்கள் சிறப்பு விமானத்தில் இத்தாலிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நான்கு நாள்கள் மத்திய தரைக்கடலில் மிதந்து சென்ற சொகுசுக் கப்பலில் பார்ட்டியில் பங்கேற்றனர். கேத்தி பெர்ரி நடன நிகழ்ச்சி உட்பட பல பிரமாண்டங்கள் அப்போது அரங்கேறின.


தற்போது மும்பையில் 3 நாள் திருமண நிகழ்ச்சி நடக்கிறது. ஆனால், திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பிருந்தே தினம் தினம் ஏதோ ஒரு நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. 12-ம் தேதி சுப விவாஹ் எனப்படும் திருமணம் நடைபெறுகிறது. 13-ம் தேதி சுப் ஆசீர்வாத் நிகழ்ச்சியும், 14-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

மும்பை பாந்த்ரா - குர்லா காம்ப்ளக்சில் இருக்கும் ஜியோ வேர்ல்டு சென்டரில் நடக்கும் இத்திருமணத்திற்கு, தங்கத்தில் செதுக்கப்பட்ட தெய்வச் சிலைகளுடன் கூடிய திருமண அழைப்பிதழ்களை உருவாக்கிக் கொடுத்து முக்கிய விருந்தினர்களை அழைத்தது அம்பானி குடும்பம்.

தம்பதிகளாக ஆகவிருக்கும் ஆனந்த் மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் முக்கியமானவர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு அழைப்பிதழும் 7 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

என்கோர் ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் விரேன் மெர்ச்சன்ட் என்பவரின் மகளே ராதிகா. தந்தையின் நிறுவனத்தில் இணைந்து பிசினஸ் நுட்பங்கள் கற்ற ராதிகா, தன் மாமியார் நிதா அம்பானி போலவே நடனமும் பயின்றவர். அம்பானி குடும்பத்து மருமகள் ஆகும் அவருக்கு, திருமணத்தின் போது அணிய மொகலாயர் காலத்து வடிவில் ஆபரணங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

‘‘என் கனவுகளுக்கு உருவம் கொடுத்தவர் ராதிகா. எனக்கு திருமணம் குறித்த யோசனையே இருந்ததில்லை. விலங்குகள் நல ஆர்வலராக காலத்தைக் கழிக்க நினைத்தேன். என்னைப் போலவே விலங்குகள் மீது ஆர்வம் கொண்ட ராதிகா, திருமணம் குறித்த என் எண்ணத்தையே மாற்றினார். உடல்நலப் பிரச்னைகளால் நான் அவதிப்பட்ட போது, எனக்கு ஆதரவாக நின்றார்'' என்று ராதிகா குறித்து நெகிழ்கிறார் ஆனந்த் அம்பானி.

திருமண ஏற்பாடுகளை முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி பார்த்துப் பார்த்து செய்து வருகிறார். அனைத்து வேலைகளையும் தனது கைப்படச் செய்து வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்குச் சென்ற நிதா அம்பானி அங்குள்ள காசி சாட் பந்தர் உணவகத்திற்குச் சென்று, அங்குள்ள உணவுகளை சாப்பிட்டுப் பார்த்து, அதை தன் மகன் திருமணத்திற்கு முன்பதிவு செய்தார். திருமணத்திற்கு அமிதாப்பச்சன், சல்மான் கான், தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் தம்பதி, ஆமீர் கான், அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ஆலியா பட், கேத்ரினா கைஃப், கரீனா கபூர், ஷாருக்கான், கரன் ஜோகர் என பாலிவுட் பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி டெல்லி சென்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் அழைத்தார்.

கடந்த 5-ம் தேதி அம்பானி வீட்டில் திருமண சங்கீத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடி மேடையில் நடனம் ஆடிய போது அவர்களுடன் சேர்ந்து அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியும் நடனமாடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. நடிகர் ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படத்தில் வரக்கூடிய தீவாங்கி பாடலுக்கு முகேஷ் அம்பானி, அவர் மனைவி நிதா அம்பானி என அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் நடனமாடினர். கனடா பாடகர் ஜஸ்டின் பீபர் இதில் கலந்து கொண்டு விருந்தினர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

இதற்கு முன்பு நடந்த இரண்டு திருமணங்களிலும் இல்லாத அளவுக்கு இந்தத் திருமணத்திற்கு முகேஷ் அம்பானி முக்கியத்துவம் கொடுத்து நிகழ்வுகளைக் கவனிக்கிறார். ‘‘சமீபகாலமாக அதானியின் பெயர் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. உலக அளவில் பல பிசினஸ் ஒப்பந்தங்களை அதானி செய்துவருகிறார். பிரதமர் மோடி பதவிக்கு வந்த பிறகுதான் அவரது பெயர் இந்த அளவுக்கு பிரபலமாகி இருக்கிறது.

குஜராத்தியர்களாக அம்பானி மற்றும் அதானி ஆகிய இருவருக்கும் இடையே எப்போதும் தொழில் போட்டி இருக்கும். தன் மகனின் திருமணத்தைப் பெரிய அளவில் நடத்தித் தன் பெயரை உலகம் முழுக்கப் பதிவு செய்யவும், தங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையை சர்வதேசத் தொழிலதிபர்களிடம் அறிமுகம் செய்யவும் இந்தத் திருமணத்தை ஒரு வாய்ப்பாக அவர் பயன்படுத்துகிறார்'' என்று மும்பைத் தொழில் உலகில் சொல்கிறார்கள்.

குஜராத்தில் நடந்த திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கு 1,260 கோடி ரூபாயும், கப்பல் பார்ட்டிக்கு 1,000 கோடி ரூபாயும் செலவழித்த முகேஷ் அம்பானி, திருமணத்திற்கு 1,500 கோடி செலவு செய்கிறார். மொத்தமாக திருமண பட்ஜெட் மட்டுமே 5,000 கோடியைத் தொட்டிருக்கிறது. இதுவும் உத்தேசமான செலவு தான். உண்மையான செலவு இன்னும் புல ஆயிரம் ஆயிரம் கோடிக ளை தாண்டியிருக்கும் என்கின்றனர்.

Similar News