மும்பை விமான நிலையத்தில் ரூ.4.90 கோடி மதிப்பு போதைப் பொருளுடன் பெண் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.4.90 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப் பொருளுடன் கென்யா நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.14.90 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை கடத்தியதாக கென்யா நாட்டைச் சேர்ந்த பெண் பயணியை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைது செய்துள்ளது.
உளவுத்துறையின் அடிப்படையில், டிசம்பர் 28, வியாழக்கிழமை நைரோபியில் இருந்து மும்பைக்கு கேக்யூ 204 விமானம் மூலம் வந்த கென்ய நாட்டவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கோகைன் போதைப் பொருட்கள் வைத்திருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் கென்ய நாட்டவரை கைது செய்தனர்.
இதில் சுமார் ரூ.14.90 கோடி மதிப்புள்ள 1490 கிராம் வெள்ளை பவுடர் கோகைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஹேர் கண்டிஷனர் பாட்டில் மற்றும் பாடி வாஷ் பாட்டிலுக்குள் இரண்டு கருப்பு பாலித்தீன் பாக்கெட்டுகள் சாமர்த்தியமாக வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 1985 ஆம் ஆண்டின் போதை மருந்துகள் மற்றும் உளவியல் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் விதிகளின் கீழ் பயணி கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.