ஆயுத ஏற்றுமதியில் சாதிக்குமா இந்தியா?

இன்று உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளர் அமெரிக்காவின் ஆண்டு ஏற்றுமதி 400 பில்லியன் டாலர்.;

Update: 2024-07-11 02:30 GMT

ஆயுத ஏற்றுமதியில் விரைவில் அமெரிக்காவை இந்தியா முந்தி விடும். இதில் இந்தியா எங்கேயுமே இல்லையே. அமெரிக்காவே 400 பில்லியனுக்குத்தான் ஏற்றுமதி செய்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவை இந்தியா முந்திவிடும். இதெப்படி சாத்தியம் அதிலும் இப்போது இந்தியா ஆயுத இறக்குமதியில் முதல் பத்து நாடுகளில் முதன்மையாக இருக்கிறது. அதை குறைக்க முடியுமா?

இப்போது நிலைமை இப்படி இருந்தாலும் இன்னும் மூன்று ஆண்டுகளில் அது சாத்தியம் என்கிறது இந்தியாவின் வளர்ச்சி. ஏனென்றால் இந்தியா துப்பாக்கிக்காக ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளை நம்பி இருந்தது. அது ரஷ்யாவிடம் இருந்து மிக நவீன AK 203 துப்பாக்கியை உற்பத்தி செய்ய துவங்கி முதல் 35000 உற்பத்தி செய்துள்ளது. இதுவரை அதை செய்த ரஷ்யாவால் அந்த சாதனையை செய்ய முடியவில்லை. இந்திய ராணுவத்திற்கு மட்டும் 6.5 லட்சம் துப்பாக்கிகள் தேவை. அதை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமேதியில் உள்ள தொழிற்சாலை மூலம் இந்தியா அதை செய்து முடித்து விடும் என்கிறார்கள்.

உலகளவில் 2.3 கோடி ஆர்டர்கள் இந்த துப்பாக்கிக்காக காத்திருக்கிறது. அதை ரஷ்யா செய்ய வேண்டுமெனில் அதற்கு 6 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்தியாவால் மூன்றே ஆண்டுகளில் அதை செய்து முடித்து விட முடியுமாம். டாடா போயிங் உடன் சேர்ந்து C320 என்ற மிலிட்டரி சரக்கு விமானத்தை உற்பத்தி செய்துள்ளது. அதன் உலகளவிலான தேவை என்பது வருடத்திற்கு 120. அமெரிக்காவின் ரோக்கீட் மார்டின் மொத்த உற்பத்தியே இதுவரை 120 தான். ஆனால் டாடாவால் அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த டார்கெட்டை இந்தியா எட்டி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியாவின் ஏவுகணைகளுக்கு உலகளவில் அதிக கிராக்கி உள்ளது. இந்தியாவின் பல்வேறுபட்ட ஆயுதங்கள் ஆர்மீனியாவில் மிகச்சிறப்பாக செயல்படுவதால், அந்த நாடு மட்டும் இறக்குமதியை அடுத்த சில ஆண்டுகளில் பில்லியன் டாலருக்கு உயர்த்தி விடும். ஒரே ஒரு நாடு இந்தியாவிடம் இருந்து பில்லியன் டாலருக்கு ஏவுகணைகளை வாங்குகிறது. நமது தேஜாஸ் விமானங்கள் தேவை உலகெங்கு உள்ளது. ஆனால் அதை வாங்காததற்கு காரணம் அதனால் குறிப்பிட காலத்தில் டெலிவரி செய்ய முடியாது என்பதால். அதை மாற்ற ஆராய்ச்சிகளை செய்த இந்திய அரசு நிறுவனம், அந்த பணிகளை டாடா போன்ற தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது.

அதனால் டாடா, மேற்சொன்ன துப்பாக்கி உற்பத்தி எல்லாம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செய்வதால் உலகில் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா அடுத்த 12 ஆண்டுகளில் உருமாறி விடும். அதற்கு இரண்டு காரணம், அமெரிக்கா, ரஷ்யாவின் ஆயுதங்களின் விலையும் அதிகம். பராமரிப்பும் மிகவும் சிரமம்.

இந்திய ஆயுதங்கள் எல்லாம் இந்தியாவின் ராணுவத்தின் அனுபவ தேவையை முன்னிறுத்தியும், சோதித்தும் செய்வதால் அதன் தரம் உலளகளவில் உயர்ந்ததாக இருக்கிறது.

உதாரணமாக அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் உற்பத்தி செய்யும் பீரங்கி குண்டுகள் வெடிப்பு திறன் 82% ஆக உள்ளது. இந்தியாவின் குண்டுகளின் வெடிப்பு திறன் 98% என்பது மிக மிக அதிகம். அதேநேரம் விலையும் குறைவு. எனவே நமது நாட்டின் ஆயுதம் மட்டுமல்ல... அதற்கான செயல்திறனும், உற்பத்தி பெருமளவில் உயர்ந்துள்ளது. இதனை எல்லாம் கணக்கில் கொண்டால் இந்தியாவின் ஆயுத ஏற்றுதி வருமானம் கிட்டத்தட்ட அமெரிக்காவை தாண்டும் வாய்ப்புகள் உள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News