பிரதமர் மோடி விநாயகர் சிலையை பரிசாக வழங்கியது ஏன்
அமெரிக்க அதிபருக்கு பிரதமர் மோடி ஏன் விநாயகரை பரிசாக வழங்கினார் என்பது குறித்த பின்னணி தகவல்கள் வெளிவந்துள்ளன.
அமெரிக்கா சென்ற மோடி உலகத்தின் சக்தி வாய்ந்த அதிகாரபீடமான வெள்ளை மாளிகைக்கு முன் அழைக்கப்பட்ட படியே சென்றிருக்கின்றார். வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படும் தலைவர்கள் என்னென்ன பரிசுகளை கொடுப் பார்கள் என்று உலகம் முழுவதும் கவனிக்கப்படும்.
காரணம் பரிசுகள் என்பது சில குறியீடுகளை காட்டும், தங்கள் நாட்டின் அடையாளம் எது, செழுமை எது, கலை எது என்பதை காட்டும், சீனா இம்மாதிரி விஷயங்களில் சரியாக இருக்கும் இன்னும் பல நாடுகள் அப்படி உண்டு. அப்படி மோடியும் அமெரிக்க அதிபர் பிடனுக்கும் அவர் மனைவி ஜில்பைடனுக்கும் பரிசுகளை வழங்கியுள்ளார்.
பிடனுக்கு மைசூர் சந்தனக் கட்டையில் செய்யப்பட்ட , இந்துக்களின் புனித விலங்குகள் உருவம் செதுக்கப்பட்ட பேழையினை மோடி பரிசாக வழங்கினார். இது ராஜஸ்தான் கலைஞர்களால் செய்யபட்டது. அந்த பேழைக்குள் விநாயக ப்பெருமான் உருவமும் வெள்ளி விளக்கும் இருந்தது. அவை கல்கத்தா கைவினைஞர்களால் செய்யப்பட்டது. இன்னும் சில நவரத்தினங்களும் மங்கல அடையாளங்களும் கொண்ட சிமிழ்களும் இருந்தன. அவை கலைவடிவ பேழைகளில் இருந்தன.
சூரத்தில் பட்டை தீட்டப்படும் செயற்கை வைரங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவ்வகையில் ஜில்பிடனுக்கு வைரம் ஒன்றையும் இந்தியா வழங்கியுள்ளது. இந்து வேதங்களின் பொருளை சொல்லும் உபன்யாச புத்தகம் ஒன்றையும் மோடி வழங்கியுள்ளார். அந்த வெள்ளை மாளிகை நூலகத்தில் இனி இந்திய வேதத்தின் பதிப்பும் இருக்கும். இந்திய அமெரிக்க உறவு 1960களிலே தொடங்கியிருக்க வேண்டியது.
ஆனால் காங்கிரஸ் அரசு அதை செய்யாமல் ரஷ்ய சீன முகாமில் விழுந்து பின்னடைந்தது. இந்தியாவின் இடத்தை சீனா ரகசியமாக, அது கம்யூனிச நாடாக இருந்தாலும் தந்திரமாக கைப்பற்றி வளர்ந்தது. இப்போது தான் இந்திய அமெரிக்க உறவுகள் புதிய அத்தியாயத்தை தொடங்குகின்றன. அவ்வகையில் விநாயகப்பெருமான் உருவத்தை பரிசாக வழங்கி அதனை தொடங்கி வைக்கின்றார் மோடி. பாரத பாரம்பரியத்தில் எல்லா நல்ல விஷயமும் விநாயகப்பெருமானை வேண்டி தொடங்குதல் மரபு.
அப்படி வெள்ளை மாளிகையில் விநாயகப்பெருமான் ஆசியில் புதிய அத்தியாயம் துளிர்க்கின்றது. இந்துஸ்தானம் தன் மரபில் நல்ல காரியத்தை தொடங்குகின்றது. இந்திய பாரம்பரியம் அறிந்த, அதன் அறம் அறிந்த, தர்மமும் ஞானமும் மரபும் அறிந்த தலைவனால் உலகின் மிகப்பெரிய அதிகார பீடத்தில் இந்துஸ்தானம் தன் பாரம்பரியத்தில் உயர்ந்து மிளிர்கின்றது. அந்த வல்ல கணபதி எல்லாவற்றையும் நலமாக தேசத்துக்கு நடத்தி கொடுக்கட்டும்