இந்தியாவிற்கு உலக நாடுகள் அறிவுரை வழங்க தயங்குவது ஏன்?

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுகொண்டிருந்த ஹவாலா பணத்தை நிறுத்தியவுடனே எல்லோருக்கும் இந்தியாவின் மதிப்பு தெரியவந்துள்ளது.

Update: 2023-02-25 05:10 GMT

நரேந்திர மோடி.

இந்தியாவில் இப்போது ஏராளமான விமான நிலையங்கள் கட்டி வருகிறோம். ரயில்நிலையம், ரயில்பாதைகள், சுரங்கப்பாதைகள், அதிவேக சாலைகள், மேம்பாலங்கள், கட்டிடங்கள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள், மருத்துவகல்லூரிகள் என ஆங்காங்கே கட்டப்பட்டு வருகிறது.

உயர் அழுத்த மின்கடத்தும் பாதைகள், சூரிய ஒளி மின்சார திட்டங்கள், உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் என எல்லாத்தையும் இந்தியா கட்டமைத்து வருகிறது. இந்த பணிகள் எல்லாம் கடன் வாங்கி கட்டப்படவில்லை. இந்தியாவின் சொந்த பணத்திலே கட்டப்படுகிறது. உள்நாட்டில் மட்டுமல்ல இலங்கையிலே சாலை வசதி, ரயில் வசதி, கட்டிடங்கள், கோவில்கள் என இந்தியா கட்டி வருகிறது. ஈரானில் துறைமுகத்தை வாங்கி கட்டி வருகிறோம். இந்தோனேசியாவில் ஒரு துறைமுகம், ஆப்பிரிக்காவில் கட்டடங்கள், தொழிற்சாலைகள் என இந்தியா கட்டி வருகிறது. எப்படி இதெல்லாம் சாத்தியம்?

இதற்கு முன்பு இந்த திட்டங்களுக்கு உலக வங்கி,  ஆசிய வங்கி கடன் கொடுத்தது. இந்த நாடு கொடுத்தது அந்த நாடு அடுத்து கொடுக்கும் என செய்திகள் தொடர்ந்து வரும் ஆனால் இப்போது? ஏன் இது போன்ற செய்திகள் தற்போது வருவதில்லை? ஏனென்றால், இந்தியாவிலிருந்து வெளியே சென்றுகொண்டிருந்த ஹவாலா பணத்துக்கு கட்டுப்பாடு போடப்பட்டுவிட்டது. அதனால் தான் இந்தியாவில் அவ்வளவு மிச்சமாகிறது. இவ்வளவு தூரம் செலவழிச்சாலும் இந்தியா வாரத்துக்கு இரண்டு பில்லியன் டாலர் அந்நிய செலவாணிய சேமித்து வருகிறது.

அதாவது வாரம் 16 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதன் முறையாக இந்தியாவின் ஏற்றுமதி மற்றும்  இறக்குமதியின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை தாண்டியுள்ளது. அதாவது ரூ.80 லட்சம் கோடிக்கு மேலே ஏற்றுமதி, இறக்குமதி செய்து காட்டியிருக்கிறோம்.

மனித உரிமை பேசும் மேற்கத்திய அரசுகளை பணத்தாலாயே அடிக்கிறோம். உனக்கு வியாபாரம் வேணுமா நாங்க என்ன செஞ்சாலும் பேசாம இரு என சொல்லாம சொல்லிக்காட்டி வருகிறோம். சீனாவிடம் எப்படி நல்ல பிள்ளையா இருக்கியோ அதே மாதிரி இங்கேயும் நல்ல பிள்ளையா இரு என பணத்தாலாயே அடிச்சு இந்தியா கூறி வருகிறது. வெளிநாட்டு அரசுகள் இந்தியாவிற்கு அறிவுரை வழங்குவது முழுவதும் நின்று போனது. பிபிசி மேலே ரெய்டு விட்டதுக்கு அமெரிக்க வெளியுறத்துறை பேச்சாளர் அப்படியே சுத்தி வளைச்சு பூசி மெழுகிட்டு போயிட்டார். முன்னாடியா இருந்திருந்தா அப்படியே கண்டனம் தெரிவிக்க கூட்டமா பல நாடுகள் கிளம்பி வந்திருக்கும்.

மேலும் வெளிநாட்டு பொருளாதார புலிகள் அறிவுரை சொல்ல வரிசை கட்டி வந்து நிற்கும்.  இந்தியாவின் பட்ஜெட்டிற்கே ஆலோசனைகள் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும். ஹார்டுவேர்டு பொருளாதார புலிகள் இப்போது முழுமையாக பதுங்கி கிடக்கின்றன. ஏன்னா இந்தியாவின் சமீபகாலத்து பட்ஜெட் உலக நாடுகளை வியக்க வைத்து வருகிறது. குறைகளும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பொருளாதாரம் பற்றியும் ஏதும் பேசமுடியலன்னு வெளிநாடுகளும் புலம்பி வருகின்றன.

Tags:    

Similar News