உக்ரைனுக்கு என்ன கொடுத்தார் மோடி வியந்து போய் நிற்கும் உலக நாடுகள்!
உக்ரைனுக்கு மோடி மிக, மிக நவீன மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களை கொடுத்துள்ளார்.;
உலகம் உற்று கவனித்த மோடியின் உக்ரைன் பயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. உலகெங்கும் அது பற்றிய விவாதங்களே நடக்கின்றன. இந்த பயணம் வெகு சிரத்தையாக நுணுக்கமாக ராஜதந்திரமாக இந்திய வெளியுற்வு அமைச்சகத்தால் நடத்தப்பட்ட பயணம்.
மோடி முதலில் ரஷ்யா சென்று வந்தார். அங்கே புட்டீனை சந்தித்து ஆலோசனகைளை செய்த அவ்ர் பின் உக்ரைனுக்கு சென்றார். உக்ரைனுக்கு செல்லும் முன் போலந்து செல்லவும் அவர் தவறவில்லை. போலந்து செல்லாமல் உக்ரைன் சென்றிருந்தால் அது சில பக்க விளைவுகளை எற்படுத்தியிருக்கும். காரணம் நேட்டோவின் ராணுவ தலமையகம் போலந்தில் தான் உள்ளது.
மிக தேர்ந்த திட்டத்துடன் ரஷ்யா, நேட்டோவின் போலந்து என இரு பக்கமும் தன் நகர்வுகளை செய்து விட்டு கடந்த வாரம் முழு பாதுகாப்புடன் உக்ரைன் சென்றார். மோடி உக்ரைனுக்கு புறப்பட்டது முதல், அவர் உக்ரைனை விட்டு வெளியேறி இந்தியாவில் கால்பதிக்கும் வரை போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது. இது வரலாற்றில் மிகப்பெரிய சம்பவம்.
இதற்கு முன் இத்தாலி, பிரான்ஸ் அதிபர்கள் உக்ரைன் சென்றார்கள். அப்போதெல்லாம் ரஷ்யா தாக்குதலை நிறுத்தவில்லை. அதாவது அவர்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மோடிக்கு ரஷ்யா தனி மரியாதை கொடுத்து தலைவணங்கியது. இது உலக அரங்கில் மவுனமாக கவனிக்கபட்டது. இதனால் சீனா கொதித்திருக்கலாம்.
மோடி உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியினை கட்டி தழுவி கொண்டார். மோடி இந்திய மரபினை கடைபிடிப்பவர், வெளிநாட்டின் கைகுலுக்கும் மரபு அவருக்கு உகந்தது அல்ல. பெண் அதிபர்கள் என்றால் இந்திய மரபுபடி தள்ளி நின்று வணங்குவதும், ஆண்கள் என்றால் ஆர தழுவி வரவேற்பதும் இந்திய மரபு. மோடி அதை சரியாக செல்லுமிடமெல்லாம் செய்வார். கைகுலுக்கல் மரபெல்லாம் ஒரு ஆதிக்க மனப்பான்மை அதை அவர் செய்வதில்லை.
ரஷ்ய புட்டீனை மோடி கட்டிபிடித்த போது மேற்குலகம் முணுமுணுத்தது, ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை உக்ரைனில் செலன்ஸ்கியினை கட்டிப்பிடித்து இது தான் எங்கள் வழமை என மோடி காட்டிய போது மேற்குலகம் அமைதியாக மோடியை வாழ்த்தியது.
மோடி செலன்ஸ்கியினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின் அவர் பேசிய பேச்சுத்தான் நேற்று உலகத்தின் தலைப்பு செய்தி. "நாங்கள் ரஷ்யா பக்கம் அல்ல, உக்ரைன் பக்கம் அல்ல, நாங்கள் போரின் பக்கம் அல்ல, நாங்கள் எப்போதுமே அமைதியின் பக்கம்’’ என்றார் மோடி.
இந்த யுகம் போருக்கானது அல்ல. இந்த காலம் வளர்ச்சிக்கும் சகோதரத்துவத்துகுமான காலம். வறுமை எல்லா நாடுகளிலும் உண்டு. அதை ஒழித்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வளமான உலகையே நாங்கள் விரும்புகின்றோம். இந்த போரின் அழிவுகள் குறித்து நாங்கள் மிக வருந்துகின்றோம். அறிவியல் மக்களை வளபடுத்த வேண்டும். பாதுகாக்க வேண்டுமே அன்றி அழிப்பதை ஏற்க முடியாது.
உக்ரைனிய குழந்தைகளையும் பெண்களையும் நாங்கள் எங்களில் ஒருவராக கருதி கலங்குகின்றோம். அவர்களின் துயரநிலை மனதை வெடிக்க செய்கின்றது. போரால் எந்த பிரச்சினையும் தீர்க்க முடியாது. போரின் முடிவு இன்னொரு பெரும் போரினை தொடங்கி வைக்கும். அதனால் பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு.
நாங்கள் ரஷ்யாவுக்க்கும் உக்ரைனுக்கும் உலகுக்கும் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். நாங்கள் அமைதியின் பக்கம் நிற்கின்றோம். அந்த அமைதிக்கு உங்களையும் அழைக்கின்றோம். எங்கள் நாடும் தர்மமும் எப்போதும் அமைதியினையே வலியறுத்தும். போர் எவ்வளவு கொடியது என்பதை பலமுறை அனுபவ பூர்வமாக அறிந்தவர்கள் நாங்கள்.
இந்த போர் நிற்க வேண்டும் என்பது உக்ரைன் ரஷ்ய தேவை மட்டுமல்ல, உலகின் தேவையும் அதுதான். "உலகமெல்லாம் ஒரே குடும்பம்" என ஜி20 மாநாட்டில் நாங்கள் முழங்கினோம். அப்படி இந்த போர் குடும்பத்தில் ஒரு சண்டையாக கருதி விரைவில் முடிவடைவே விரும்புகின்றோம். நான் உக்ரைன் அதிபரை இந்தியாவுக்கு அழைக்கின்றேன். அவர் விரைவில் இந்தியா வரட்டும். எந்த போரும் உடனே நிற்காது. ஆனால் அந்த போரை நிறுத்த எங்களால் முயன்ற முதல் முயற்சியினை முன்னெடுப்பது எங்கள் கடமை. இந்த போரை நிறுத்துவது தான் உலகிற்கு எங்கள் நாடு செய்யவேண்டிய பெரும் கடமை.
உலகில் எங்கோ யாரோ மோதட்டும் என எங்களால் விட்டு விட முடியாது. இந்த உலகின் ஒவ்வொரு மனிதரையும் எங்களில் ஒருவராக கருதவேண்டும் என்பதே எங்கள் தர்மம். மானுட சகோதரத்துவப்படி இந்த உலகில் எல்லா உயிர்களும் வாழவேண்டிய அவசியப்படி நாங்கள் போரை நிறுத்த கோருகின்றோம். செலன்ஸ்கிக்கு எங்கள் நாட்டின் கதவு எப்போதும் திறந்திருக்கின்றது என்று பேசினார். பிரதமர் மோடியின் இந்த உரை இந்தியா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் என சொல்வதை காட்டுகின்றது. போர் விரைவில் முடியலாம் அல்லது தொடரலாம். ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த முதல் பிரதமர் எனும் பெருமையினை மோடி பெறுகின்றார். மோடியின் உக்ரைன் பயணம் பன்முகங்களை கொண்டது. முதலில் உலகின் வலுவான நாடு எனும் அந்தஸ்தை இந்தியாவுக்கு உறுதி செய்தது. இரண்டாவது இந்தியா ரஷ்ய சார்பு நாடு இல்லை. இந்தியா உலகில் அமைதியை விரும்பும் நாடு என உறுதி செய்தது. மூன்றாவது போரின் முடிவுக்கு பின் உக்ரைனில் அமையப் போகும் தொழில் வாய்ப்பில் புதிய கட்டுமானத்தில் இந்திய நிறுவனங்களை இறக்குவது. நான்காவது உக்ரைனின் எதிர்காலத்தில் இந்திய பங்களிப்பினையும் சேர்த்து கொள்வது என பல அம்சங்கள் இந்த பயணத்தில் உண்டு. ரஷ்யா உக்ரைன் என இரு நாடுகளுக்கு இடையில் சாதுர்ய நகர்வை இந்தியா மேற்கொள்கின்றது. மோடி உக்ரைனுக்கு ஒரு அன்பளிப்பினை உதவியாக வழங்கினார். அதுதான் இப்போதைய பெரும் செய்தி. BHISHM Cubes எனும் மருத்துவ தொகுப்பு கருவியினை வழங்கினார்.
( BHISHM stands for Bharat Health Initiative for Sahyog Hita & Maitri)இது முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு. மோடி ஆட்சியின் சாதனைகளில் ஒன்று. மோடி அரசு இந்தியாவின் சொந்த தயாரிப்பை எல்லா வகையிலும் ஊக்குவித்தது. அவ்வகையில் "பல செயல்பாடு" கொண்ட கருவிகளை உருவாக்கியது.
ராணுவம் மற்றும் பொதுமக்களுக்காக அவசர சிகிச்சைகளை அளிக்க பல வகை கருவிகளை ஒருசேர அமைப்பது அதனில் முக்கியமானது. அப்படி இயற்கை பேரிடர், கொள்ளை நோய்கள் என மக்களுக்கும், யுத்த காலம் என ராணுவத்துக்குமான மருத்துவ கூடாரங்கள் முக்கியமானவை. சிறிய சிறிய மருத்துவ பொதிகள் கொண்ட தொகுப்பு இது. ஒரு கண்டெய்னர் எனப்படும் பொருள் பெட்டிக்குள் ஏகப்பட்ட மருத்துவ பொதிகளை அப்படி அடுக்கலாம். ஒவ்வொரு பொதியும் ஒரு கூடாரமாகும். அதற்குள் அத்தியாவசிய மருத்துகளும், மருத்துவ கருவிகளும் இருக்கும். இதில் ஆக்ஸிஜனை தானே உற்பத்தி செய்யும் கருவிகளும் உள்ளே இருக்கும். இயற்கை பேரிடர் அல்லது வேறு எந்த வகை பேரிடர்கள் என வந்தால் ஒரு கண்டெய்னரை அனுப்பினால் சுமார் 500 பேர் வரை இப்படி ஐநூறு கூடாரங்களில் உயர் சிகிச்சை பெறமுடியும். இது போன்ற பல மருத்துவ கண்டெய்னர்களை மோடி கொடுத்துள்ளார்.
இது இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று. ராணுவத்துக்கும் சிவிலியன் எனும் பொதுமக்களுக்குமாக இவை இப்போது ஏராளமாக தயாராகி விட்டன. இதனால் தான் வயநாடு போன்ற இடங்களாகட்டும் இதர இயற்கை பாதிப்பாகட்டும் வெளிநாட்டு உதவிகள் முன்பு போல் கோரப்படுவதில்லை. என்ன நடந்தாலும் எங்களை காக்கும் சக்தி எங்களுக்கு உண்டு என்பதை இந்தியா காட்டுகின்றது, எல்லா இடங்களிலும் அந்நிய உதவிகள் பெறுவது நல்லதல்ல, பாதுகாப்புமல்ல. மோடி இந்த வகை கருவிகள், பொதிகள் என பல மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் உக்ரைனுக்கு கொடுத்துள்ளார். இதனால் பல ஆயிரம் மக்கள் ஒரே நேரத்தில் சிகிச்சை பெறமுடியும். மோடியின் அமைதிக்கான முழக்கமும், செலன்ஸ்கி எங்கள் நாட்டுக்கு வரலாம் எனும் அமைதிக்கான முதல் முன்னெடுப்பும், அங்கே கொடுக்கப்பட்ட பாதிக்கபட்ட மக்களுக்கான மருத்துவ கருவிகளும் இந்தியாவின் மதிப்பினை உலக அரங்கில் வெகுவாக உயர்த்தி விட்டன. இந்தியா வல்லரசு நிலையினை எட்டியதை மவுனமாக ஒப்புகொள்கின்றன உலக நாடுகள். இங்கே ஆழமாக கவனிக்க வேண்டியதும், ஒவ்வொரு இந்தியனும் உண்ரவேண்டிய செய்திகளும் சில உண்டு. உலகம் கவனிப்பதும் அதுவே. உக்ரைன் மக்கள் கன்ணீரோடு நினைப்பதும் அதுவே தான். ஆம், உக்ரைனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் போட்டி போட்டு ஆயுதமும் பணமும் கொடுக்கின்றன. அழிவுகள் அந்த நாடுகளால் தூண்டப்படுகின்றன. ஆனால் முதன் முதலில் அவர்கள் காயத்துக்கு மருந்திட்ட தேசம் இந்தியா தான். எல்லா நாடுகளும் போரை தொடர சொல்லி ஊக்குவிக்கும் போது போர் வேண்டாம் பேசி தீர்க்கலாம் என உக்ரைனை அழைக்கும் நாடும் இந்தியா தான். உக்ரைன் மக்கள், ரஷ்ய மக்கள் மனதில் தெய்வமாக உயர்கின்றார் மோடி, அந்த தலைவனை அம்மக்கள் கண்ணீரோடு வணங்குகின்றார்கள். மோடியின் பேச்சில் பல வருத்தம் தெரிந்தது. அதில் ஒரு காயமும் இருந்தது. ஆம், ஒரே இந்தியாவாக இருந்து பிரிந்தவை இந்தியாவும், பாகிஸ்தானும். இருநாடுகளுக்கும் இடையே இன்று வரை மோதல் தொடர்கின்றது. அதற்கு மதம் உள்ளிட்ட பெரிய சிக்கல்கள் பல உண்டு. ஆனாலும் சகோதர தேசத்தோடும், அந்த தேசத்தின் அடாவடியோடு மோதும் அவலம் இந்தியாவுக்கு உண்டு. அப்படியே உக்ரனும், ரஷ்யாவும் சோவியத்தாக இருந்து பிரிந்த தேசம். அவர்கள் குடுமப்பத்தாரை கொண்டே அவர்களை மேலைநாடுகள் அடிப்பது தான் உக்ரைன் ரஷ்ய யுத்தம். இந்த சோகத்தை மெல்லியதாக தொட்டுகாட்டி மோடி பேசிய போது இருநாட்டு மக்களும் மோடியினை மனதால் வணங்கினார்கள். பெரும் சாதனை பயணத்துடன் பாரத கொடி கம்பீரமாக பறக்க மோடி தாயகம் திரும்பி விட்டார், செலன்ஸ்கி விரைவில் இந்தியா வரலாம். இதன் மூலம் உக்ரைன்- ரஷ்யா போரும் முடிவுக்கு வரலாம்.
1948, 1961, 1965 என இந்திய தேசம் வரிசையாக போர்களை சந்தித்த போது இந்திய ராணுவத்துக்கு நல்ல குளிர் ஆடை கூட கிடையாது. அடிபட்டால் இட நல்ல மருந்து கிடையாது. 1961ல் சீனா இந்தியாவினை போட்டு சாத்தியபோது, சொவியத் ரஷ்யா அமைதி காத்தது. அமெரிக்க அதிபர் கென்னடி தான் ஆடைகளும் மருந்தும் அனுப்பினார். அப்படி ஒரு அவலமான காலம் இந்தியாவுக்கு இருந்தது. சீனா ஒன்றும் பெரிய ரானுவபலம் கொண்ட நாடு அல்ல. பெரிய யுத்தமெல்லாம் நடத்தியவர்கள் இல்லை. நேரு மட்டும் தைரியமான நபராக இருந்திருந்தால் இன்று ரஷ்யாவினை உக்ரைன் விரட்டுவது போல் சீனாவினை ஓட, ஓட விரட்டி அடித்திருக்கலாம். ஆனால் நேருவின் பலவீனமும் குழப்பமுமே சீனாவுக்கு பலமாயிற்று.
அப்படி இருந்த இந்தியா, இதே ரஷ்யாவிடம் 1965ல் சாஸ்திரியினை பலிகொடுத்த பின்பும் ரஷ்ய அடிமையாக இருந்த இந்தியா இன்று ரஷ்யா நடத்தும் போர்களத்தில் சொந்த BHISHMS நவீன மருத்துவ பொதிகளை கொடுத்து உலகின் வல்லரசாக பெருமையோடு நிற்கின்றது. உலகம் அடுத்தடுத்த காட்சிகளுக்கு காத்து கொண்டிருக்க, உக்ரைனும் ரஷ்யாவும் மெல்ல போர் நிறுத்தத்துக்கு தயாராகின்றது. உக்ரைன் அதிபருக்கும் பதவி காலம் முடிந்து விட்டது. அங்கும் தேர்தல் வேண்டும் நீண்ட கால போரை அவர்களும் நடத்த முடியாது. ரஷ்ய நிலையும் அப்படித்தான். இருவருமே போரை நிறுத்த விரும்புகின்றார்கள். ஆனால் அதை நிறுத்தாமல் தொடர்வது மேல்நாட்டு அதர்மம். அந்த போரை நிறுத்தி அம்மக்களை வாழவைக்க முயல்வது இந்திய தர்மம். அந்த இந்திய இந்துதர்மம் விரைவில் வெல்லும், அப்போது மோடி எவ்வளவு பெரிய தவ யோகி, கர்ம யோகி என்பதை, இந்திய பூமி எப்படியான தர்ம பூமி என்பதை உலகம் காணும். ஜெய்ஹிந்த்... வந்தே மாதரம்... அமைதியை விரும்பும் சிவன் பூமி, ஜெகத்தினை ஆளட்டும்...