ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்கு போலாம் வாறீங்களா..?!

மும்பையி்ல் 40 நாட்கள் தொடர்ந்து நடக்கும் ஆனந்த் அம்பானி வீட்டு திருமண விருந்துக்கு போகலாமா....;

Update: 2024-07-16 03:27 GMT

உணவு பரிமாறும் முகேஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி 

சமீபத்தில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி - ராதிகா மர்சன்ட் திருமணம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் கூட ஒரு பேசு பொருள் ஆனது, அனைவரும் அறிந்ததே. அந்த திருமணத்தை மிக விமரிசையாக உலகமே வியக்கும் வகையில் முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்தார். டீக்கடைகள் முதல், முகநூல். பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வரை இது ஒரு மிகப்பெரிய விவாதப்பொருள் ஆகிவிட்டது.

அம்பானி வீட்டு திருமணம் வெறும் வெற்றுக் கொண்டாட்டங்களும் பிரம்மாண்டமாக நடந்த நிகழ்வு மட்டுமல்ல.. அதே மேடையில் 50 ஜோடி ஏழைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர் முகேஷ் அம்பானி குடும்பத்தார்.

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சீராக தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கமும், வீட்டுக்கு தேவையான அத்தனை உபகரணங்கள் முதல் ஒரு வருடத்திற்கான மளிகை பொருட்கள் கொடுத்து அத்தனை குடும்பங்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளனர்.

அது போக தன் திருமண விருந்தை மக்கள் பலர் உண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில் 40 நாட்கள் "பண்டாரா" எனும் தொடர் விருந்து நிகழ்வுகள் பொதுமக்களுக்கு விமரிசையாக நடத்தி வருகின்றனர்.

தினமும் ஒரு வேளைக்கு 9000 பேருக்கும் மேல் தொடர்ந்து மூன்று வேளையும் 40 நாட்கள் இந்த திருமண விருந்து வழங்கப்பட்டு வருகிறது என்பது எத்தனை சிறப்பு. இந்த விருந்தினை சாப்பிட மும்பை ஏழை மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் ஒரு வேளைக்கு 9 ஆயிரம் பேருக்கு உணவு என்ற இலக்கு இருந்தாலும், அதனை விட அதிகமாகவே சாப்பிட மக்கள் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாங்க... நாமும் மும்பை வரை போய் சாப்பிட்டு விட்டு வரலாம்.

Tags:    

Similar News