அதிகமாக வரி செலுத்திய நடிகர் விஜய்; இந்தியாவில் 2ம் இடம்

அதிக வரி கட்டிய பிரபலங்களின் பட்டியலில் அகில இந்திய அளவில் நடிகர் விஜய் 2-வது இடம் பிடித்துள்ளார்.;

Update: 2024-09-06 02:30 GMT

அதிக வரி கட்டிய பிரபலங்களின் பட்டியலில் அகில இந்திய அளவில் நடிகர் விஜய் 2-வது இடம் பிடித்துள்ளார்.

எத்தனை கோடி தெரியுமா?

ஃபார்ச்சூன் இந்தியாவின் 'அதிக வரி கட்டிய பிரபலங்கள்' பட்டியலில் த.வெ.க தலைவர் மற்றும் நடிகருமான விஜய் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 2024 நிதியாண்டில் அதிக வரி கட்டிய பிரபலங்களின் ஃபார்ச்சூன் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலில் நடிகர் விஜய், விளையாட்டு வீரர் விராட் கோலி, நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள் விஜய், மோகன்லால், அல்லு அர்ஜூன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர்கள் விராட் கோலி, தோனி, சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளனர்.

அதிக வரி கட்டிய பிரபலங்களின் பட்டியல்...

ஃபார்ச்சூன் இந்தியாவின் முழு பட்டியலும், கட்டிய வரி தொகையின் விவரங்களும் இதோ...

ஷாருக் கான் - ரூ.92 கோடி

விஜய் - ரூ.80 கோடி

சல்மான் கான் - ரூ.75 கோடி

அமிதாப் பச்சன் - ரூ.71 கோடி

விராட் கோலி - ரூ.66 கோடி

அஜய் தேவ்கன் - ரூ.42 கோடி

மகேந்திர சிங் தோனி - ரூ.38 கோடி

ரன்பீர் கபூர் - ரூ.36 கோடி

சச்சின் டெண்டுல்கர் - ரூ.28 கோடி

ஹிர்திக் ரோஷன் - ரூ.28 கோடி

கபில் சர்மா - ரூ.26 கோடி

சௌரவ் கங்குலி - ரூ.23 கோடி

கரீனா கபூர் - ரூ.20 கோடி

ஷாஹித் கபூர் - ரூ.14 கோடி

மோகன்லால் - ரூ.14 கோடி

அல்லு அர்ஜூன் - ரூ.14 கோடி

ஹர்திக் பாண்ட்யா - ரூ.13 கோடி

கியாரா அத்வானி - ரூ.12 கோடி

கத்ரீனா கைஃப் - ரூ.11 கோடி

பங்கஜ் திரிபாதி - ரூ.11 கோடி

அமீர் கான் - ரூ.10 கோடி

ரிஷப் பண்ட் - ரூ.10 கோடி

Similar News