திரையரங்குகளில் ஏப்ரல் 20 வரை 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி

Update: 2021-04-03 08:30 GMT

கர்நாடகாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் நேற்று  5000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெங்களூரில் மட்டும் 3509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் 

திரையரங்குகள், விடுதிகள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 % சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலாளர் ரவிக்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில், நகரில் உள்ள அனைத்து உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் அனைத்தும் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை அபார்ட்மெண்ட் வளாகங்களில் மூடப்பட உள்ளன.

பேரணிகள் மற்றும் தர்ணாக்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பொது போக்குவரத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 50% இருக்கையை தாண்டக்கூடாது.அலுவலகங்களிலும், பணியிடங்களிலும் முடிந்தவரை வீட்டிலிருந்தே வேலை செய்யும் வழக்கம் பின்பற்றப்படும் என்று அவர் கூறினார்."திரையரங்குகளில் அதிகபட்சமாக 50 சதவீத இருக்கை வசதி க்கு உட்பட்டமாற்று இருக்கை வசதிகள் அனுமதிக்கப்படும், அதே நேரத்தில் விடுதிகள், பார்கள், கிளப் மற்றும் உணவகங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.பப்களில் ஏதேனும் அத்துமீறல் ஏற்பட்டால், கோவிட் தொற்று நோய் முடியும் வரை இந்த வசதி மூடப்படும்" என்று அந்த சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News