5G இன்டர்நெட்டை களமிறக்கும் Vi நிறுவனம்

இந்தியாவில் 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த உள்ளதாக Vi நிறுவனம் அதன் வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளது.;

Update: 2023-11-18 16:00 GMT

கிட்டத்தட்ட ஒரு வருட போட்டிக்கு பிறகு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5G நெட்வொர்க் சேவைகளை இந்தியாவில் வழங்கி வருகிறது. தற்போது Vi நிறுவனமும் இந்த போட்டியில் பங்கு பெற்று இந்தியாவில் உள்ள இரண்டு நகரங்களில் 5G சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

அரசு ஒதுக்கியுள்ள ஸ்பெக்ட்ரத்தில் 3.7Gbps வரையிலான அதிகப்பட்ச வேகத்தை சமீபத்தில் அடைந்ததாக Vi கூறியது.“இந்தியாவில் Vi 5G நெட்வொர்க்கை அனுபவிக்க தயாராக இருங்கள். பூனா மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் 5G லைவாக கிடைக்க உள்ளது” என்று Vi வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் எந்தெந்த நகரங்களில் எப்போது 5G நெட்வொர்க் அறிமுகமாகும் என்பது குறித்த எந்த ஒரு தகவலையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. Vi வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ள படி, 5G நெட்வொர்க்குக்கு இணைக்க கஸ்டமர்களிடம் 5G சிம் கார்டு இருக்க வேண்டும்.

கஸ்டமர்களிடம் 5G நெட்வொர்கை சப்போர்ட் செய்யக்கூடிய ஸ்மார்ட் போன் இருக்கும் பட்சத்தில், அவர்களது 4G சிம் கார்டை 5Gயாக மாற்றிக் கொள்ளலாம் என்று சமீபத்தில் ஒரு பிளாக் பதிவில் Vi நிறுவனம் கூறியிருந்தது. இதன் மூலமாக அவர்கள் Vi நிறுவனத்தின் 5G நெட்வொர்க்கை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் Vi ஸ்டோர்களில் 5G ரெடி சிம் கார்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

Tags:    

Similar News