அமெரிக்காவிற்கு பொருட்கள் கொண்டு செல்கிறீர்களா? கொஞ்சம் கவனமாக இருங்க!

அமெரிக்கா செல்லும் இந்திய பயணிகளின் பிராண்டட் பொருட்கள் போலியாக இருந்தால் விமான நிலையத்திலேயே அழித்து விடுகின்றனர்.

Update: 2024-06-22 04:15 GMT

அமெரிக்க விமானநிலையத்தில் கைப்பற்றப்பட்ட போலி பொருட்கள் 

ஒரு நாட்டிற்குப் பயணம் செய்வதை கற்பனை செய்து பாருங்கள், தனிப்பயன் அதிகாரிகள் உங்கள் ஆடைகளில் ஒரு ஜோடி கத்தரிக்கோலை ஓட்டுவார்கள் அல்லது அவற்றை வெறுமனே தொட்டியில் போடுவார்கள்! ஆம், நைக், அடிடாஸ், பூமா போன்ற போலி பிராண்டுகளை எடுத்துக்கொண்டு அமெரிக்காவிற்குப் பயணம் செய்தால் இது நிகழலாம்.

சமீபத்தில், அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு நாட்டிற்குள் கள்ளப் பொருட்களைக் கடத்துவதைத் தடுக்கும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. சமீப மாதங்களில் அமெரிக்காவிற்குச் சென்ற பல இந்திய மாணவர்கள் மற்றும் பிற பயணிகளின் போலியான ஆடம்பரப் பொருட்களை விமான நிலையத்தில் அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்கா பிராண்டட் பொருட்களை மட்டும் தான் அனுமதிக்கிறது. பிராண்டட் பொருட்களில் போலிகள் கலந்தால், அதனை உள்நாட்டில் விற்றால் கண்டுகொள்வதில்லை. ஆனால் பிராண்டட் பொருட்களின் போலி பொருட்கள் வெளிநாட்டில் இருந்து யாராவது தெரியாமல் கொண்டு வந்தால் கூட விமான நிலையத்திலேயே அழித்து விடுகின்றனர்.


இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்வோர், பிராண்டட் பொருள்களின் போலிகள் என்று தெரியாமலோ தெரிந்தோ வாங்கி வைத்திருந்தால், அவற்றை கொண்டு செல்லாதீர்கள். சென்றால், அவை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும்.

அமெரிக்கா செல்கிறோம் என்று புமா, அடிடாஸ், நைக் போன்ற உயர்தர பிராண்டட் பொருள்களை தேடித் தேடி வாங்குபவர்கள், அதற்குரிய இடங்களில் வாங்குங்கள். ஒருவேளை பேரம் பேசி அடிமாட்டு விலைக்கு வாங்கி சபாஷ் போட்டுக் கொள்ள முயன்றால், அது போலியானதாக இருக்கலாம், அமெரிக்கா செல்லும்போது அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படலாம். இதன் மூலம் நீங்கள் பெரும் சங்கடத்திலும், அசிங்கத்திலும் சிக்க நேரிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

2023 ஆம் ஆண்டில் 19,724 ஏற்றுமதிகளில் 23 மில்லியன் கள்ளப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் .

பறிமுதல் செய்யப்படும் பொருள்கள், பயணிகளின் கண் முன்னே அழிக்கப்படுவதாகவும், துணிகளாக இருந்தால் கிழிக்கப்பட்டு குப்பையில் வீசப்படுவதாகவும் கூறப்படுகிறது. தெரியாமல் தவறு செய்தவர்களை கூட அசிங்கப்படுத்துவதில் அமெரிக்க அதிகாரிகள் பெரும் கண்டிப்புடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்கா செல்வோர் கவனமாகவே இருங்கள்.

Tags:    

Similar News