கடலூர் வழியாக தூத்துக்குடிக்கு ரயில்

மும்பையில் இருந்து, கடலுார் வழியாக தூத்துக்குடிக்கு ரயில் இயக்கப்படுகிறது.

Update: 2023-05-26 04:11 GMT

மும்பையில் இருந்து, கடலுார் வழியாக தூத்துக்குடிக்கு ரயில் இயக்கப்படுகிறது. (கோப்பு படம்)

மத்திய ரயில்வே சார்பாக, மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினலில் இருந்து தாதர், கல்யாண், லோனோவாலா, புனே, தாவுந்த், சோலாபூர், கல்புர்கி, வாடி, ராய்ச்சூர், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, திருத்தணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம் சந்திப்பு, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடிக்கும் அதே மார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கும் இரண்டு சேவைகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

வெள்ளிக்கிழமை மதியம் 1.15 க்கு மும்பையில் புறப்படும் ரயில் கடலூருக்கு சனிக்கிழமை மதியம் 1.47க்கு வந்து சேரும். சிதம்பரத்திற்கு மதியம் 2.25 வந்து சேரும். அன்று இரவு 11 மணிக்கு தூத்துக்குடிக்கு சென்று சேரும்.

தூத்துக்குடியில் இருந்து ஞாயிறு காலை 4 மணிக்கு புறப்படும் ரயில், சிதம்பரத்திற்கு காலை 11.50 மணிக்கு, கடலூருக்கு நண்பகல் 12.38 க்கு வந்து மறுநாள் மதியம் 3.40 க்கு மும்பை சென்று சேரும். மும்பையில் இருந்து மே 26 மற்றும் ஜூன் 2 தேதிகளில் புறப்படும் ரயில் மே 27 மற்றும் ஜூன் 3 தேதிகளில் கடலூர், சிதம்பரம் வழியாக தூத்துக்குடி செல்லும்.

தூத்துக்குடியில் இருந்து மே 28, ஜூன் 4 தேதிகளில் புறப்படும் ரயில் அதே தேதிகளில் சிதம்பரம், கடலூர் வந்து மே 29 மற்றும் ஜூன் 5 தேதிகளில் மும்பை சென்று சேரும். இந்த ரயில் காஞ்சிபுரம், திருத்தணி வழியாக செல்வது குறிப்பிடத்தக்கது. மேற்சொன்ன ஊர்களில் இருந்து கடலூர், சிதம்பரம், துாத்துக்குடிக்கு வரவும், செல்லவும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயணிகள் உபயோகம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இந்த சேவைகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News