எல்லையில் இதுவரை இல்லாத கடுமை காட்டிய இந்திய ராணுவம்

இந்திய- பாக்கிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமை காட்டியுள்ளது.;

Update: 2024-11-01 02:33 GMT

காஷ்மீர் மாநிலம் அக்னூர் செக்டரில் சிவா மந்திர் அருகே சென்று கொண்டிருந்த 18 RR படை பிரிவை சேர்ந்த ஆம்புலன்ஸ் மீது பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்திய ராணுவம் உடனடியாக அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்தது. இந்திய ராணுவத்தின் Rastriya Riffle, Para Cammonto, NSG Team, K..9....Unit, BMP II, J K Police, UAV படைப்பிரிவுகள் என என கூடுதல் படைகளும் அதி உச்ச பாதுகாப்பு அம்சங்களும் களத்தில் இறக்கப்பட்டன.

குறிப்பாக காஷ்மீரில் இதுவரை இல்லாத ஒரு சம்பவமாக இந்த என்கவுண்டர் சம்பவத்தின் போது BMP II தாக்குதல் மற்றும் கவச வாகனங்கள் இந்திய ராணுவ வரலாற்றில் முதல் முறையாக களத்திற்கு இறக்கப்பட்டன.

தீவிரவாதிகள் மீது கடுமையான தாக்குதலை தொடுக்கவும், இந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் களத்திற்கு கொண்டு வரப்பட்டன.

சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவத்தின் BMP வாகனங்கள் ஏறி செல்லும் காட்சிகளும் வெளியிடப்பட்டன.

இது எதனை காட்டுகிறது என்றால் இனிமேல் தீவிரவாதிகள் மீது இந்தியா எந்த கரிசனத்தையும் காட்டாது என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லவே. மேலும் இது போன்ற கடுமையான தாக்குதலை இனி இந்தியா தொடரும் என்பதை உணர்த்தவும். தான் இந்த படம் வெளியிடப்பட்டது.

மேலும் இந்த என்கவுண்டர் சம்பவத்தின் போது இந்திய ராணுவத்திற்கு சிறந்த உறுதுணையாக இருந்து வழி காட்டிய K 9 Unit சேர்ந்த வாயில்லா ஜீவனான PHANTOM தீவிரவாத தாக்குதலில் தன் உயிரை இழந்தது. தேசத்திற்காக தன் இன்னுயிரை தியாகம் செய்தது. அதன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்வோம்.

தொடர்ந்து இந்தியாவின் மீது தீவிரவாத தாக்குதல் தொடுக்கும் பாக்கிஸ்தானின் இந்த அறிவிக்கப்படாத போரை முடிவுக்கு கொண்டு வர.

இனி வரக்கூடிய காலங்களில் தீவிரவாதிகளின் அட்டகாச செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க T 72 வை கூட இந்திய ராணுவம் களத்தில் இறக்க சாத்திய கூறுகள் உள்ளன. ஆக மொத்தத்தில் எல்லையில் ஒரு நாள் முன்பாகவே இந்தியா தீபாவளியை கொண்டாடி விட்டது.

Tags:    

Similar News