பாஸ்டாக் மூலம் தினசரி சுங்க வசூல் ரூ.193 கோடி எட்டி சாதனை
பாஸ்டாக் மூலம் தினசரி சுங்க வசூல் ரூ. 193 கோடி எட்டி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் சுங்கச்சாவடிக் கட்டணம் வசூலிப்பதற்கான பாஸ்டாக் முறையை செயல்படுத்துவது, சீரான வளர்ச்சிப் பாதையுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 2023 ஏப்ரல் 29 அன்று, இதன் மூலம் தினசரி சுங்க வசூல் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது. இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 193.15 கோடியை, ஒரே நாளில் 1.16 கோடி பரிவர்த்தனைகள் மூலம் வசூல் செய்துள்ளது.
2021 பிப்ரவரி மாதத்தில் இருந்து பாஸ்டாக் கட்டாயப்படுத்தப்பட்டதிலிருந்து, 339 மாநில சுங்கச்சாவடிகள் உட்பட பாஸ்டாக் திட்டத்தின் கீழ் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 770 லிருந்து 1,228 ஆக அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சுமார் 97 சதவீதம் பேருக்கு ஃபாஸ்டாக் வழங்கப்பட்டுள்ளது. 6.9 கோடிக்கும் அதிகமானோர் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த அமைப்பு தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணச் சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது. அனைத்து சாலைப் பயனாளர்களுக்கும் தடையற்ற மற்றும் தொந்தரவில்லாத சுங்கச்சாவடி அனுபவத்தை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது.
சுங்கக் கட்டண வசூலில் பாஸ்டாக், இந்தியா முழுவதும் 50 மேற்பட்ட நகரங்களில் உள்ள 140க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் செயல்திறன் மிக்க சேவையை வழங்கி வருகிறது.