14 விளைபொருட்களுக்கு ஆதார விலை அதிகரிப்பு

நெல் உள்பட 14 விளைபொருட்களுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

Update: 2023-06-11 17:00 GMT

மத்திய அரசு விவசாய விளைபொருட்களின் ஆதார விலையை உயர்த்தி வெளியிட்டுள்ள புதிய பட்டியல்.

மத்திய அரசு ஆண்டு தோறும் விவசாய விளைபொருட்களுக்கான ஆதார விலையை மார்க்கெட் சூழலுக்கு ஏற்ப உயர்த்தி வருகிறது. இந்த ஆண்டும் இதே போல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பொதுவகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு (100 கிலோவிற்கு) 2040 ரூபாயில் இருந்து 2183 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

முதல் தர வகை நெல்லுக்கு 2060 ரூபாயில் இருந்து 2203 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுரக ஜோவார்க்கு 2970 ரூபாயில் இருந்து 3180 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜோவார் மல்தாண்டி ரகத்திற்கு 2990 ரூபாயில் இருந்து 3225 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கம்புக்கு 2350 ரூபாயில் இருந்து 2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கேழ்வரகிற்கு 3578 ரூபாயில் இருந்து 3846 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. துவரை, மக்காச்சோளத்திற்கு 6600 ரூபாயில் இருந்து 7000ம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பச்சைப்பயிருக்கு 7755 ரூபாயில் இருந்து 8558 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உளுந்துக்கு 6600 ரூபாயில் இருந்து 6950 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிலக்கடலைக்கு 5850 ரூபாயில் இருந்து 6377 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சூரியகாந்தி விதைக்கு 6400 ரூபாயில் இருந்து 6760 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மஞ்சள் நிற சோயா பீன்ஸ்க்கு 4300 ரூபாயில் இருந்து 4600 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எள்ளுக்கு 7830 ரூபாயில் இருந்து 8635 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நைஜர் விதைக்கு 7287 ரூபாயில் இருந்து 7734 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பருத்தி நடுத்தர இழை குவிண்டாலுக்கு 6080 ரூபாயில் இருந்த 6620 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீண்ட இழை பருத்தி விலை குவிண்டாலுக்கு 6380 ரூபாயில் இருந்து 7020 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வினை விவசாயிகள் வரவேற்று உள்ளனர்.

Tags:    

Similar News