தெலுங்கானா உருவான நாள் தெரியுமா..? டிஎன்பிஎஸ்சி -ல் ஒரு கேள்விங்க..!

தெலுங்கானா மாநிலம் எப்போது உருவானது? அதை கொண்டாடுவதன் நோக்கம் என்ன போன்றவைகளை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Update: 2024-06-02 06:44 GMT

Telengana Formation Day 2024 in Tamil

தெலுங்கானா உருவான நாள்

இந்தியாவின் 28வது மாநிலமான தெலுங்கானா, ஜூன் 2, 2014 அன்று உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசம் என்று ஒரே மாநிலமாக இருந்தது ஆந்திரம், தெலுங்கானா என்று தனி மாநிலமாக உருவாகிய நாள். தெலுங்கானா மாநிலம் உருவானதற்கு போராடியவர்களை நினைவுகூரவும் அவர்களை கௌரவப்படுத்தவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

Telengana Formation Day 2024 in Tamil

தெலங்கானாவில் உள்ள 30 மாவட்டங்கள் தேசியக் கொடி ஏற்றி இந்த நாளைக் கொண்டாடுகின்றன. கூடுதலாக, தெலுங்கானா மாநில மக்களை கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களை அவர்களின் சாதனைகளுக்காக கௌரவிக்கிறது.

தெலுங்கானா உருவான நாளின் வரலாறு

தெலுங்கானா உருவான நாள்

நவம்பர் 1, 1956 அன்று, தெலுங்கானா ஆந்திரப் பிரதேசத்துடன் ஒன்றிணைந்து தெலுங்கு பேசும் மக்களுக்காக ஒரு ஒருங்கிணைந்த மாநிலத்தை உருவாக்கியது. 1969 இல், தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்படவேண்டும் என்று ஒரு புதிய மாநிலத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும் 1972 ம் ஆண்டில் ஒரு தனித்துவமான ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

Telengana Formation Day 2024 in Tamil

பல்வேறு சமூக அமைப்புகள், மாணவர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் 1969 ஆம் ஆண்டு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.

ஏறக்குறைய 40 ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு, தெலுங்கானா மசோதா காங்கிரஸ் காரியக் கமிட்டி மற்றும் பாரதிய ஜனதா கட்சியால் பிப்ரவரி 2014 இல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் 2014ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் பெறப்பட்டது. அதே ஆண்டு அதன் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒப்புதல் மசோதாவின்படி, வடமேற்கு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பத்து மாவட்டங்களைக் கொண்டு தெலுங்கானா அமைக்கப்பட்டது.

Telengana Formation Day 2024 in Tamil

தெலுங்கானா உருவான நாளின் முக்கியத்துவம்

தெலுங்கானா உருவானது தெலுங்கானா இயக்கத்தின் வெற்றியை அடையாளப்படுத்துகிறது. தெலுங்கானாவை ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக தனி மாநிலமாகப் பிரித்ததை இது நினைவுபடுத்துகிறது.

2014 ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி அன்று, தெலுங்கானா மக்களின் நம்பிக்கையை உணர்ந்து 57 ஆண்டுகால இயக்கம் முடிவுக்கு வந்தது. அந்த இயக்கம் அப்பகுதி மக்களுக்கு ஒரு தனி அடையாளத்தை வழங்கியது மட்டுமல்லாமல், இந்திய வரைபடத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. இப்போது தனி மாநிலமாக தெலுங்கானா, மாநிலத்தின் எல்லைகளை வரைபடத்தில் காட்டிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கானா உருவான நாளில் இந்தியாவின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்துகளை அனுப்புகிறார்கள்.

Telengana Formation Day 2024 in Tamil

தெலுங்கானா உருவான நாள் எப்போது?

ஒவ்வொரு ஆண்டும், தெலுங்கானா உருவான தினம் ஜூன் 2 அன்று கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாள் என்பதால், தெலுங்கானா மாநில மக்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தெலுங்கானா தினம் அந்த மாநில மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

தெலுங்கானா உருவான நாளை அறிவித்தவர் யார்?

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014 இல் இந்தியக் குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் ஜூன் 2 தெலுங்கானா உருவாக்க நாளாகக் குறிப்பிடப்பட்டது. தெலுங்கானாவை சுதந்திர மாநிலமாக உருவாக்குவதற்கான தீர்மானம் ஒரு வருடத்திற்கு முன்னதாக, ஜூலை 1, 2013 அன்று காங்கிரஸ் காரிய கமிட்டியில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தெலுங்கானா உருவாக்க நாள் நிறுவப்பட்டது.

தெலுங்கானா உருவான நாளின் வரலாறு என்ன?

தெலுங்கானா உருவான நாள் பல ஆண்டுகளுக்கு முந்தைய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. தெலுங்கானா மக்கள் 1952 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு பேசும் சமூகத்தின் தனித்துவமான மொழி சார்ந்த அக்கறைகளை காரணம் காட்டி தனி மாநிலம் கேட்டு வந்தனர். ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர் தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவானது.

Telengana Formation Day 2024 in Tamil

தெலுங்கானா உருவான நாள் பொது விடுமுறையா?

தெலுங்கானா உருவான நாள் மாநிலத்தில் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுளளது.

தெலுங்கானா உருவான தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் அமைக்க போராடிய ஏராளமான தெலுங்கர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தெலுங்கானா உருவான தினம் அனுசரிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் ஜூன் 2 ஆம் தேதி தெலுங்கானா தினம் அனுசரிக்கப்படுகிறது.

Telengana Formation Day 2024 in Tamil

கடந்த ஆண்டு கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் அரசால் 10வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தனி மாநில கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கும் நிலை உருவானது. மேலும் அந்த தீவிரமான போராட்டமே அப்போதைய UPA அரசை ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Tags:    

Similar News