கங்கனா ரனாவத் இயக்கும் எமர்ஜென்ஸி: வாஜ்பாயாக நடிக்கப்போறது யார் தெரியுமா?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இயக்கும் எமர்ஜன்ஸி படத்தில், வாஜ்பாய் ரோலில் நடிக்கவுள்ளவர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2022-07-28 07:32 GMT

அரசியல் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துத் திரைப்படங்கள் எடுப்பது சமீப காலமாக அதிகரித்துவருகிறது.

சர்ச்சைகளுக்குப் பெயர்போன பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிப்பு மட்டுமல்லாது இயக்கத்திலும் கவனம் செலுத்திவருகிறார். தற்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகிவரும் எமர்ஜன்ஸி எனும் படத்தை கங்கனா ரனாவத் இயக்கவுள்ளார். இப்படத்தில் இந்திரா காந்தியாக கங்கனாவே நடிக்கவுள்ளார்.

ஜெயபிரகாஷ் நாராயணன் ரோலில் அனுபம் கேர் நடிக்கவுள்ளார். இதில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் ரோலில் நடிக்கப்போவது யார் எனும் கேள்வி இருந்துவந்தது. இந்நிலையில் அதைத் தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி நடிகர் ஸ்ரேயஸ் தல்பேட் இந்த ரோலில் நடிக்கவுள்ளாராம். ஸ்ரேயஸ் தல்பேட் நடிக்கவுள்ள ரோல் குறித்த ஃபர்ஸ்ட் லுக்கை, கங்கனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது .


வாஜ்பாயைப் பொறுத்தவரை கங்கனா இயக்கும் இப்படம் மட்டுமல்லாமல் மற்றொரு படமும் அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது. அந்த வகையில், எழுத்தாளர் உல்லேக் என்.பி எழுதிய 'The Untold Vajpayee: Politician and Paradox' எனும் புத்தகத்தைத் தழுவி ஒரு படம் எடுக்கப்படவுள்ளது.

'அடல்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் பனுசாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாகத் தயாரிக்கப்படவுள்ளது. 2023ஆம் ஆண்டு படப்பிடிப்பைத் தொடங்கி அவ்வாண்டு வாஜ்பாய் பிறந்த தினத்தில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Tags:    

Similar News