நாடு முழுவதும் 26 மாநிலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை

தமிழகம் உட்பட 26 மாநிலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது -மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

Update: 2022-03-25 02:57 GMT

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் தமிழகம் உட்பட 26 மாநிலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிதேந்திர சிங் அளித்துள்ள பதிலில், `சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஆண்டு தோறும் தேர்வு செய்யப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கையை 180 ஆக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதேபோல் ஆண்டு தோறும் தேர்வு செய்யப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 150-லிருந்து 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், காலிப் பணியிடங்களை, மாநில பணிகளில் உள்ள அதிகாரிகள் மூலம் நிரப்புவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

அதேசமயத்தில் நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. இதில், தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 376, ஆனால் 322 பேர்தான் பணியில் உள்ளனர். ஆந்திராவில், 239 பேருக்கு 194 பேர்தான் வேலை செய்கின்றனர். இதுபோன்று

பீகார் 342/248,

சத்தீஸ்கர் 193/156

குஜராத் 313/250,

ஹரியானா 215/181,

ஹிமாச்சல பிரதேசம் 153/122,

ஜம்மு & காஷ்மீர் 137/59,

ஜார்கண்ட் 215/148,

கர்நாடகா 314/242,

கேரளா 231/157,

மத்திய பிரதேசம் 439/370,

மகாராஷ்டிரா 415/338,

மணிப்பூர் 115/87,

நாகாலாந்து 94/59,

ஒடிசா 237/175,

பஞ்சாப் 231/180,

ராஜஸ்தான் 313/241,

சிக்கிம் 48/39,

தெலங்கானா 208/164

திரிபுரா 102/61,

உத்தரகண்ட் 120/ 89,

உத்தரப் பிரதேசம் 652/548,

மேற்கு வங்காளம் 378 / 342 அதிகாரிகள் மட்டுமே பணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News