Seven Year Old Girl Fell into Hot Sambar-கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 2ம் வகுப்பு மாணவி சாவு..!

சக தோழியோடு ஓடிப்பிடித்து விளையாடியபோது தவறி கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து மாணவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-11-20 11:12 GMT

Seven Year Old Girl Fell into Hot Sambar,Kalaburagi District,Karnataka,Tragedy,Seven-Year-Old girl,Hot Sambhar Vessel,Mahanthamma Shivappa Jamadar

கர்நாடக மாநிலம், கலபுர்கி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சூடான சாம்பார் இருந்த பாத்திரத்தில் விழுந்த ஏழு வயது மாணவி மஹாந்தம்மா சிவப்பா ஜமாதர் உடல் வெந்து உயிரிழந்தார்.

Seven Year Old Girl Fell into Hot Sambar

கலபுர்கி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் அப்சல்பூர் தாலுகாவின் சைனமகேரா கிராமத்தில் கடந்த 16ம் தேதி வியாழக்கிழமை நடந்தது.

உயிரிழந்த குழந்தை மஹாந்தம்மா சிவப்பா ஜமாதர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மதிய உணவு பரிமாறுவதற்காக சமையல் அறையில் இருந்த கொதிக்கும் சூடான சாம்பார் பாத்திரத்தில் அந்த பெண் குழந்தை தவறி விழுந்துவிட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

Seven Year Old Girl Fell into Hot Sambar

இரண்டாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்த குழந்தை பலத்த தீக்காயங்களுக்கு ஆளானதாகக் கூறப்பட்டது. அதனால் சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுமி தனது தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​பள்ளியின் தாழ்வாரப்பகுதியில் துரத்திச் சென்ற போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அவருக்கு 50 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், முதலில் கலபுர்கியில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், பின்னர் சனிக்கிழமை பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Seven Year Old Girl Fell into Hot Sambar

இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, பள்ளியின் தலைமை ஆசிரியர் லலாபி நடாப், பொறுப்புத் தலைமை ஆசிரியர் ராஜு சவான், பள்ளியின் தலைமைச் சமையல்காரர் கஸ்தூரிபாய் தலைக்கேரி உள்ளிட்ட 3 பேர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த மறுநாளே, தொகுதி கல்வி அதிகாரி மூலம் உயர் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, இந்த இடைநீக்கம் நடந்துள்ளது.

Tags:    

Similar News