வன்முறையில் பிறந்து வன்முறையில் வீழ்ந்தவர்..!

அதிகாரவர்க்கத்தை நடுங்க வைத்த பண்டிட் குயின் பூலான்தேவி மாண்ட தினம் ஜூலை 25.;

Update: 2024-07-25 03:09 GMT

பூலான் devi

‘‘நான் வன்முறையில் பிறந்தேன். நான் வன்முறையால் இறப்பேன். இதுதான் என் விதி என சரியாக தனது வாழ்க்கையை கணித்திருந்தார் பூலான் தேவி.

ராஜபுத்திர (தாக்குர்) சமுதாயத்தைச் சேர்ந்த 22 பேரை மண்டியிடச் சொல்லி சுட்டுக் கொல்கிறாள் ஒரு பெண்மணி. இந்தியா முழுவதும் இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவுகிறது. இந்த படுகொலைகளைச் செய்த பெண்மணியின் பெயர் பூலான் தேவி.

அவர் பின்னாளில் மிர்சாபூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் தன் இல்லத்துக்கு திரும்புகிறார் பூலான் தேவி. எங்கிருந்தோ அதிர்ந்த துப்பாக்கி சத்தம். அந்த குண்டடிகள் பாய்ந்து சுருண்டு விழுந்து மரணித்து போனார்.

பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி வாழ்க்கையின் மீது பற்றற்றுப் போகிறவர்கள் மத்தியில், அதிலிருந்து மீண்டு வந்து மக்கள் பிரதிநிதியானவர் பூலான் தேவி. இன்றும் பல பெண்களுக்கு உத்வேகமாக இருக்கிறார். அவர் மீது பல கொலை வழக்குகள் இருக்கின்றன. ஆனால் இன்றும் அந்தப் பெயரைக் கேட்டால் அதிகாரவர்க்கம் நடுங்கும். வாழ்நாள் முழுக்க ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவுக் குரலாய் ஒலித்தவர் பூலான் தேவி... இன்று அதாவது ஜூலை 25ம் நாள் பூலான்தேவி கொலையான நாள்.

Tags:    

Similar News