கேரள பா.ஜ.க.,வில் இணைந்த ஐ.பி.எஸ்...!
கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.ஸ்ரீலேகா பா.ஜ.க.,வில் இணைந்தார்.;
கேரளாவின் முதல் இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) அதிகாரி ஆர் ஸ்ரீலேகா பாரதிய ஜனதா கட்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் முன்னிலையில் இணைந்தார்,
1987 பேட்ச் அதிகாரியான ஸ்ரீலேகா, மாநில கேடரில் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 2020 ல் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
“நான் கட்சி சார்பற்ற அதிகாரியாக 33.5 ஆண்டுகள் பணியாற்றினேன். ஆனால் எனது ஓய்வுக்குப் பிறகு, நான் பல பிரச்சினைகளை தூரத்திலிருந்து பார்க்க ஆரம்பித்தேன். அப்போது தான் மக்கள் சேவை செய்வதற்கு இதுதான் சிறந்த வழி என்பதை உணர்ந்தேன். பா.ஜ.க.,வின் இலட்சியங்களில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
அதனால் தான் பா.ஜ.க.,வில் இணைந்தேன். இனிமேல் மக்களுக்கு திருப்தியாக சேவையும் செய்வேன்’’ அப்படின்னு தான் பாஜகவில் சேர்ந்ததற்கு விளக்கமும் சொல்லி இருக்கார். தமிழகத்தில் ஐ.பி.எஸ்.,ஐ வைத்து அரசியல் நடத்தும் பா.ஜ.க., கேரளாவிலும் இதே பாணியினை பின்பற்ற தொடங்கி உள்ளது. இனி கேரள அரசியல் களமும் சூடுபிடிக்கும் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.