அடுத்து வருது 'ரிலையன்ஸ்' நிறுவனத்தின் தடுப்பூசி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு முதல் கட்ட மருத்துவபரிசோதனை முயற்சி மேற்கொள்ள தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது;
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம், கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பில் இறங்கியுள்ளது.
ரிலையன்ஸின் துணை நிறுவனமான, ரிலையன்ஸ் லைப் சயின்சஸ் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இரண்டு 'டோஸ்' செலுத்தும் வகையிலானஅந்த தடுப்பூசிக்கு தற்போது முதல் கட்ட மருத்துவபரிசோதனை முயற்சியை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற் கட்ட சோதனையின் மூலம் தடுப்பூசியின் செயல்பாடு மற்றும் பாதிப்புகள் குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ளும்.
இந்த முதல் கட்ட சோதனை முயற்சி 58 நாட்கள் நடைபெறும். இந்த சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின், இரண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெறும்.