ரத்தன் டாடாவுக்குள் ஒரு உண்மைக்காதல்..! அதான் அவர் கல்யாணம் செய்யவில்லையா?
ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இப்போ தெரிஞ்சுக்கங்க.;
ரத்தன் டாடா.
ரத்தன் டாடா அப்போது லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தார். அங்கு வசித்த அமெரிக்கப் பெண்ணை ரத்தன் டாடா இளைஞனாக இருந்தபோது காதலித்தார். உண்மையான காதலில் இருந்த அவர், அவரின் காதலியை உண்மையாகவே நேசித்தார். அதனால், 'அவர் உன்னையன்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன்' என்று தனது காதலியிடம் உறுதியளித்திருந்தார்.
பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று ரத்தன் டாடாவுக்கு இந்தியாவில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது ரத்தன் டாடா அவரது காதலி மற்றும் அவரது பெற்றோரை தன்னுடன் இந்தியாவுக்கு வரச் சொன்னார். 1962ம் ஆண்டில் இந்தியா-சீனா இடையே போர் நடந்துகொண்டிருந்தது. அதன் காரணமாக, சிறுமியின் பெற்றோர் இந்தியா வர மறுத்தனர். உடனே, இந்தியாவில் இருந்து வந்த பின் திருமணம் செய்து கொள்வதாக ரத்தன் டாடா ஒப்புக்கொண்டு இந்தியா திரும்பினார்.
அவர் இந்தியா வந்த பிறகு, அவரது பாட்டி இறந்துபோனார். அவரால் உடனே லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்ப முடியவில்லை. அந்த காலகட்டத்தில் அவரது காதலி அவரது பெற்றோரின் விருப்பப்படி வேறொருவரை திருமணம் செய்து கொண்டது ரத்தன் டாடாவுக்கு தெரியவந்தது. இதைக் கேளிவிப்பட்ட பின்னரும் அந்த பெண்ணுக்கு தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதில்லை என்றும் முடிவு செய்தார். அதன்படியே இன்றுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றொரு உண்மை, அவர் நாட்டிற்காக உழைக்க விரும்பினார். நாட்டை மேம்படுத்துவதில் தனது முழு நேரத்தையும் செலவிட விரும்பினார். எனவே, தனிப்பட்ட உறவுகளுக்கு எந்த முக்கியத்துவமும் அவர் கொடுக்கவில்லை.
ஒருமுறை பேட்டியின்போது, "உங்கள் காதலி வேறொருவரை திருமணம் செய்து சென்ற பிறகும் நீங்கள் ஏன் வாக்குறுதியை நிறைவேற்றினீர்கள்?" என்ற கேள்விக்கு, ரத்தன் டாடா கூறிய பதில், "நான் அவரை உண்மையாக நேசித்தேன். அவர் என்னைவிட்டு பிரிந்துவிட்டார் என்பதற்காக நான் அவர் மீது வைத்த உண்மையான நேசம் மாறாதது. அதனால் எனது வாக்குறுதியில் நான் உறுதியாக இருந்தேன்." என்றார்.
நினைத்துப்பாருங்கள். என்ன ஒரு உண்மையான காதல்..! காதலிலும் ரத்தன் டாடா லெஜெண்ட் என்பதை உறுப்படுத்திவிட்டார்.