விவேகானந்தர் மண்டத்தில் 3 நாள் தியானம் செய்யும் பிரதமர்..!
விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாள் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகிறார்.;
ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்ததும் தொடர்ந்து 3 நாள் வரை தியானம் செய்வது பிரதமர் மோடியின் பழக்கங்களில் ஒன்று. கடந்த முறை லோக்சபா தேர்தல் முடிந்ததும், இமயமலை குகைக்குள் சென்று மூன்று நாள் அமர்ந்து தியானம் செய்தார்.
இந்த முறை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாள் அமர்ந்து தியானம் செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு ஜூன் முதல் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் வரும் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது. இந்த பிரசாரத்தை நிறைவு செய்ததும் பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கன்னியாகுமரி வரும் பிரதமர் வரும் 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய மூன்று தினங்கள் குமரி விவேகானந்தர் மண்டபத்தில் தனிமையில் தியானத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய வரும் பிரதமரை ‘‘இரண்டாம் விவேகானந்தரே வருக... வருக...!’’ என வரவேற்க தமிழ்நாடு மக்கள் தயாராகி வருகின்றனர்.