அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறதா?

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.;

Update: 2024-03-28 03:46 GMT

ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதன் நுகர்வுக்கு ஏற்ப உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் பாராசிட்டமால், மார்பின், அட்ரினலின், சிட்ரிசின், பாம்பு விஷத்திற்கு எதிரான ஆன்டிசீரம், சல்புடமைன், சாலிசிலிக் அமிலம், ரேபிஸ் தடுப்பூசி, பிசிஜி, டிபிடி, ஹெபடைடிஸ் பி, ஜப்பான் காய்ச்சல், டெட்டனஸ் தடுப்பூசிகள், ஸ்டீராய்டுகள் மற்றும் பலவகையான மருந்துகளின் விலை அதிகரிக்கும். இந்த மருந்துகள் காய்ச்சல், ரத்த சோகை மற்றும் கோவிட் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும், விலைவாசி உயர்வால் தனியார் மருந்து நிறுவனங்களுக்கு பல கோடி லாபம் கிடைத்து வருகிறது. இந்நிலையில் அத்தியாவசிய மருந்துகளின் விலையை அதிகரிக்க மருந்து தயாரிப்பு கம்பெனிகள் தீர்மானித்துள்ளன. முந்தைய ஆண்டுகளில் 10 மற்றும் 12 சதவீத விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. அதேபோல் இந்தாண்டும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்த, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இம்முறை விலை உயர்வு சதவீதம் சற்று குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், 'பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் என 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் வருடாந்திர மாற்றத்திற்கு ஏற்ப, அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலின் கீழ், அத்தியாவசிய மருந்துகளின் விலையை 0.0055% அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதால், சில நிறுவனங்கள் தங்களது ஆண்டு வருவாயில் 12 முதல் 13 சதவீதம் வரை அதிகம் ஈடுட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

Similar News